தேசிய சுற்றுச்சூழல் வாரம் இன்று (30) ஆரம்பமாகி, ஜூன் 5 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மனப்பாங்கு மேம்பாடு, தூய்மை பேணல், காற்று மாசுபாடு கட்டுப்பாடு, உயிரியல் பாதுகாப்பு, நீர் வள பாதுகாப்பு மற்றும் கடற்கரை சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்திய நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
Let it Bud – “தளிர்க்க இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் தேசிய உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு, ஜூன் 5 ஆம் தேதி ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதே நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.