சாதி பேதம் பாரா சமதர்மத் தமிழ் கடவுள், வீதி உலா எழுந்துவரும் விழாக்கோலம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2026 (புதன்கிழமை)
சாதி பேதம் பாரா சமதர்மத் தமிழ் கடவுள்,
வீதி உலா எழுந்துவரும் விழாக்கோலம்.
ஆறுபடை வீடுகொண்ட,
ஆற்றங்கரை வேலனுக்கு,
அடுத்துவரும் தினங்களிலே,
அலங்கார உற்சவம்.
சாதி பேதம் பாராமல்,
சகலரையும் அவன் சன்னிதியில் உள்வாங்கும்
சமதர்மச் சாமி,
வீதி உலா எழுந்துவரும் விழாக்கோலம்.
நீதி வழுவி,
நாதியின்றி நிற்கெதியாய் நிற்பவரையும் கைவிடாமல்,
கை கொடுத்துத் தூக்கிவைக்கும் கண்கண்ட தெய்வம்,
கருவூலம் கடந்து காட்சிதரும் காலம்.
அவ்வையின் அருந்தமிழ் அள்ளிப் பருகிட,
அவ அருகில் எழுந்து வந்த,
செந்தமிழர் தெய்வம்.
எம் மன்னவனின் வரிப்படையை,
அவன் எல்லையிலே அமர்ந்திருந்து,
வெல்லும் வழிகள் சொல்லி வாழ்த்தி நின்ற,
வல்ல தமிழ் தெய்வம்,
தெருவீதி எழுந்தருளும் திருநாள்.
வண்ண மயில் ஏறிவரும்
வள்ளிமணவாளனை,
நல்ல தமிழ் சொல்லெடுத்து,
போற்றி நிற்போம்.
ஆழியிலே அஞ்சாமல் ஆடிய சோழனவன் வம்சம் நாம்,
தோளினிலே காவடிகள் ஏற்றிவைத்து,
அழகன் வாசலிலே
ஆடி நிற்போம்,
ஆடியவர் மீண்டும் வந்து, வீரநிலம் எழுந்து நிற்க, வேண்டி நிற்போம்.
ஆறுமுகம் ராஜ்குமார் (கனடா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.