வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவில் மகோற்சவ வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
19-08-2026 ஆம் திகதி புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவத்தின் வேடடைத்திருவிழா 24.08.2025 திங்கட்கிழமை அன்றும், 27-08-2026 வியாழக்கிழமை அன்று இரதோற்சவமும், 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 30-08-2026 ஞாயிற்றுக் கிழமை வசந்தோற்சவமும் (பூங்காவனம்) இடம்பெறவுள்ளது.
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயிலானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து கிழக்கு திசையில் 700M தொலைவில் அமைந்துள்ளது.
15.08.2026 சனி பகல்: கணபதி ஹோமம் மாலை நம்பியாண்டார்நம்பி சுவாமி ஊர்வலம்
16.08.2026 ஞாயிறு மாலை: நாகசதுர்த்தி உற்சவம்
19.08.2026 புதன் பகல் 10 மணிக்கு துவஜாரோகணம், (கொடியேற்றம்)
24.08.2026 திங்கள் வேட்டை திருவிழா,
26.08.2026 புதன் இரவு வான் உயர் சப்பறம்
27.08.2026 வியாழன் காலை: தேர்த்திருவிழா (காலை 7 மணி வசந்தமண்டபூசை) இரவு மயில்வாகனம் (சூர்த்திருவிழா
28.08.2026 வெள்ளி காலை: சூர்ணோற்சவம், யாகதரிசனம், ஊறணி சமுத்திரத்தில் தீர்த்த ஸ்நானம், வல்வை சிவன் ஆலயம் சென்று தங்குதல், இரவு 07 மணிக்கு சிவன் ஆலயத்திலிருந்து ஆலயம் திரும்புதல்
29.08.2026 சனி மாலை: வன்னிமர விநாயகர் பொங்கல்.
30.08.2026 ஞாயிறு மாலை: வசந்தோற்சவம் (பூங்காவனம்)
01.09.2026 செவ்வாய் பகல்: பிராயச்சித்த அபிஷேகம் (குளிர்த்தி) இரவு வைரவர் மடை
பகல் திருவிழாவுக்கான வசந்தமண்டப பூசை காலை 10.00 மணிக்கும்
இரவுத்திருவிழாவுக்கான வசந்தமண்டப பூசை இரவு 7.00 மணிக்கும் நடைபெறும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.