தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் கணேசபுரம் கிராமத்திற்க்கு ரூபா 13 இலட்சம் நிதியில் அறநெறிப் பாடசாலை கையளிப்பு செய்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்றய தினம் இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலச்சம் பெறுமதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கட்டிடத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சம்பிர்தாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்ததுடன், நடுகல்லையும் திரை நீக்கம் செய்து வைத்ததார்.
மங்கல சுடர்களினை, சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், சமூக செயற்பாட்டாளர் தாயபாரன், ஆலய பரிபாலனசபை தலைவர், கலாச்சார உத்தியோகத்தர் திரு.சி.கஜேந்திரகுமார் உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து பஞ்சபுராணம் ஓதப்பட்டதுடன், வரவேற்பு நடனம், வரவேற்பு உரை, என்பன இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வரவர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையிலான தொண்டர்கள்,
அறநெறி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.