அமெரிக்க கறுப்பின இளைஞர் வெள்ளையின போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தீர்ப்பு வெளியானதில் வன்முறை!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2014 (வியாழக்கிழமை)
அமெரிக்காவின் மிஸ்ஸூரி மாநிலத்தின் பெர்குசன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கறுப்பினத்தவரான மைக்கேல் பிறவுண் நிராயுதபாணியான நிலையில் வெள்ளையின போலீஸ் அதிகாரியான டரன் வில்சனால் 12 தடவைகள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் எதுவித தண்டனைகளும் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்ததை தொடர்ந்தே வன்முறைகள் ஆரம்பித்திருந்தன.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் தீர்ப்பை அறிவித்த சென்லூசியஸ் கவுண்டி சட்டமா அதிபர் Bob McCulloch, 9 வெள்ளையர்களையும், 3 கருப்பினத்தவர்களையும் கொண்ட ஜூரியான தாம் மட்டுமே அனைத்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் கடந்த ஆகஸ்ட் 20 முதல் வாராவாரம் ஆராய்ந்ததாகவும் பல சாட்சிகள் முன்னுக்குபின் முரணான பல தகவல்களை கூறியதாகவும் அவை தடயங்களுடன் ஒத்துபோகவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தீர்ப்பு வெளியாகி சிறிது நேரத்தில் கருத்து தெரிவித்த மைக்கேல் பிரவுனின் குடும்பத்தினர், தமது பிள்ளையை கொன்ற கொலையாளி தனது செயலுக்கான விளைவுகளை பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும், எமது வலியை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதை புரிந்து கொள்வதாகவும், உங்களது ஆதங்கங்களை நேர்மையான மாற்றம் கொண்டுவர போராடுமாறும் கேட்டுள்ள அதேவேளை வன்முறைக்கு தீர்வு வன்முறை அல்ல ஆகையால் அமைதியான முறையில் போராடங்களை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளனர்.
போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ள இந்நிலையில் சுட்டு கொண்ட வெள்ளையின போலீஸ் அதிகாரியான டரன் வில்சன் நடந்த சம்பவத்துக்கு எதுவித வருத்தமும் தெரிவிக்காது நான் எனது கடமையையே செய்தேன் என்ற கூற்று ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
முரண்பட்ட ஆதாரங்கள் என்பதை காட்டி தீர்ப்பு வழங்கிய Bob McCulloch, நடுநிலையாக தீர்ப்பை வழங்காமல் அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கினார் என்று ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தனது வாக்குமூலத்தில் டரன் வில்சன் காரினுள் துப்பாக்கியுடனான போராட்டத்தின்போது இரண்டு தடவைகள் பிறவுனை சுட்டதாகவும், அதை தொடர்ந்து காரை விட்டு ஓடிய பிறவுண் மீண்டும் தன்னை நோக்கி தாக்க ஓடிவந்ததாகவும் உயிரை காப்பாற்றவே மீண்டும் பல தடவைகள் சுட்டதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களின் ஹொலிவூட் படங்களில் வேண்டுமானால் சுடப்பட்டு படுகாயமடைந்த ஹீரோ மீண்டும் வில்லனின் உயிரை பறிக்க ஓடிவரலாம், நிஜத்தில் படுக்காயமடைந்த நிராயுதபாணி எப்பிடி உயிரை பறிக்க ஓடிவரமுடியும் என்ற கேள்வி எமக்கே எழுகிற போது உலக போலீஸ்காரன் அமெரிக்காவுக்கு எப்பிடி எழாமல் போனது அவர்களுக்கே வெளிச்சம்.
தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாகவும் வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமைதி காக்குமாறு வேண்டியும் போராட்டங்கள் அயல் மாநிலங்களுக்கு பரவத்தொடங்கி வீதி மறியல் வரை சென்று இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வரவுள்ள Thanks Giving Day, தொடர்ந்து வரவுள்ள பண்டிகை நாட்களை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை கருப்பு வெள்ளிக்கிழமை(Black Friday) என விடுமுறை நாளாக அமெரிக்கா முழுவதும் அன்று என்றுமில்லாதவாறு ஷாப்பிங் நடைபெறும். இதை புறக்கணிக்குமாறு போராட்டக்காரர்கள் வேண்டியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.