இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த ட்ரோனின் முதலாவது சோதனைப் பயணத்தை இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் (Port City) நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ட்ரோனில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன், இது 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
சர்வதேச சந்தைகளில் ட்ரோன் அடிப்படையிலான விமானங்களை அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் EHang நிறுவனம் ஆரம்பித்துள்ள ‘Global Fast Track Program’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த ட்ரோன்களின் பிரதான இயக்க மையமாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.