இன்று உலக அஞ்சல் தினம், வல்வை அஞ்சலகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2013 (புதன்கிழமை)
இன்று 09.10.2013 உலக அஞ்சல் தினம் ஆகும். இதையொட்டி நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அஞ்சல் அலுவலகங்களில் இவ் அஞ்சல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறையிலும் அஞ்சல் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்ட்டது.
வல்வெட்டித்துறை சந்திக்கு மிக அண்மையில், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் உள்ள தனியார் வீடொன்றில் தற்பொழுது இயங்கிவரும் தபால் அலுவலகம், அஞ்சல் தினத்தையொட்டி சோடிக்கப்பட்டிருந்ததுடன், அலுவலக வளாகத்தில் பூரண கும்பமும் வைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தபால் சேவகர்கள் என்ற ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு தபால் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. அக்காலத்தில் தபால் சேவகர்கள் நடந்து சென்றே செய்திகளை கடிதங்கள் வாயிலாக கொடுத்து வந்துள்ளனர்.
இன்று தொலைத்தொடர்பின் அபரிமித வளர்ச்சி காரணமாக அதிலும் கைத்தொலைபேசி, மடிக்கணனிகள் வருகையால் அஞ்சல் சேவையின் அவசியம் குறைந்தே வந்தாலும் தபால் சேவையின் தேவையை யாராலும் புறந்தள்ளமுடியாது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.