இன்னும் ஒரு வாரத்தினுள் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் “valvettithurai.org” இணையத்தளத்திற்கும் அதனை நிர்வகிப்பவர்களுக்கும் ‘வல்வை அலையோசை’ இணைய சஞ்சிகையின் சார்பான வாழ்த்துக்கள்.
எந்த ஒரு விடயத்தையும் ஒரு முறை செய்வதாயின் எங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி முடிந்த வரையில் சிறப்பாகச் செய்து நல்ல பெயர் வாங்கி விடலாம். ஆனால் அதனையே தொடர்ந்து செய்து நல்ல பெயர் வாங்குவது என்பது ஒரு சிரமமான பணி. அந்த சிரமமான பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல்கள் சேகரித்தல், புகைப்படம் எடுத்தல், செய்திகள் கட்டுரைகளை எழுதுதல், பிரசுரத்துக்கு ஏற்ற முறையில் எழுத்துக்களில் திருத்தங்கள் செய்தல், உடனுக்குடன் அவற்றைப் பிரசுரித்தல், கணனி மற்றும் இணைய சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுமிடத்து அவற்றைத் தீர்த்தல் என்று எழுத்துத்துறை, இணையத்துறை சார்ந்த திறமையுடையவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதால் உங்களுக்கு இது சாத்தியமாக இருக்கிறது. யார் யார் என்னென்ன பணியைச் செய்கிறீர்கள் என்று உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டால் என்ன?
‘பயனுள்ள இணைப்புக்கள்’ என்ற பகுதியில் வல்வையுடன் தொடர்புடைய இணைய தளங்களைப் பட்டியலிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவ்வாறான தளங்கள் எத்தனை இருக்கின்றன, என்னென்ன இருக்கின்றன,அவை தரும் தகவல்கள் என்ன என்று அனேகமானவர்களுக்குத் தெரியாது.
மற்றும் அதே பகுதியில் தமிழ், ஆங்கிலம் என்ற தலைப்புக்களின் கீழ் தமிழ், ஆங்கில அகராதிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பது போல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான அகராதிகளின் பெயர்களையும் குறிப்பிடலாம் (உதாரணத்துக்கு ‘கபுர்க்கா’)
வர்த்தக ரீதியான விளம்பரங்களை உங்கள் இணையத்தளத்தில் ஒரு கட்டணத்துடன் பிரசுரிப்பது பற்றி சில வேளைகளில் நீங்கள் நினைத்திருக்கக் கூடும். முதலாவது பிறந்த நாளின் பின் அதனை நீங்கள் ஆரம்பித்தால் என்ன?
உங்கள் சேவை மென்மேலும் முன்னேற்றமடைந்து இன்னும் பல அகவைகளைக் காண மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.