வரலாறு பதிவாகி பதிவு வரலாறாகிறது - திரு & நகுலசிகாமணி, வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)
(Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
வரலாறு பதிவாகி பதிவு வரலாறாகிறது
Valvettithurai.org ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகின்ற வேளையில் அதன் வளர்ச்சி மேலும் மேலும் வளர வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் வாழ்த்துகிறது.
இன்று உலகம் சிறுத்துள்ளது. பறவைகளும் காலநிலைக்கேற்ப நாடு விட்டு நாடு பறக்கின்றன. தமிழர் வாழ்வும் வளமும் நம் நாட்டில் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பத்து லட்சம் தமிழர்கள் எப்படி என்று தெரியாமலே பிறதேசம் நோக்கிப் புறப்பட்டார்கள். வேரோடும் வேரடி ஈரத்தோடும் புலம் பெயர்ந்தார்கள். புலம் பெயராதவர்கள் இருப்பதால் எங்கள் தேசம், எங்கள் மக்கள், வல்வை மண் என்ற உணர்வு அவர்களுக்கு வரமாகி அவர்களை இயங்க வைக்கின்றது.
ஊர் வரலாற்றைப் பேண பாரம்பரிய பொருட்களும், பாரம்பரிய ஒளிப்படங்களும், உதவுவதுபோல உசாத்துணையாக பயன்படுத்த ஊடகங்கள் பயன்படுகின்றன. அந்த வகையில் Valvettithurai.org பேதமின்றி நல்ல முறையில் வல்வையின் செய்திகளை நுனிவிரலுக்குள் அடக்கி ஒரு வருடமாக பூமிப்பந்தின் பல பாகங்களிலும் வல்வை மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. அந்தச்சேவை தொடர்ந்து மேலும் மேலும் வளர வாழ்த்துவதோடு நின்றுவிடாமல்;..........
தங்கள் ஊடகம் போராட்டத்திற்கு முன்பு வல்வையில் (1) மீன்பிடிக் வள்ளம் கட்டும்தளம் (க.சபாரத்தினம் முன்நாள் பட்டினசபைத் தலைவர் அவர்களுடையது (2) திரு.செ.குமரகுரு அவர்களின் ஐஸ்கட்டி தொழிற்சாலை (3) திரு.எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களின் குளிர்பானத் தொழிற்சாலை, (4) வ.வ.இராமசாமிப்பிள்ளை அவர்களின் பீடித் தொழிற்சாலையின் விநியோகம், (5) கூட்டுத் தொழிலாக வல்லை நெசவு தொழிற்சாலை நான் உட்பட பலர் வேலை செய்திருந்தோம்.
அதில் திரு.ச.ஞானமூர்த்தி (முன்நாள் பட்டினசபைத் தலைவர் பின்நாட்களில் காரியதரிசியாக வேலை செய்திருந்தார். வல்வையைச் சேர்ந்த திரு.தி.சேந்தன் பருத்தித்துறையில் திருமணம் புரிந்தவர். கற்கோவளத்தில் ஜெயந்தா ஐஸ்கட்டித் தொழிற்சாலை அமைத்தார். இன்று தொண்டைமானாறு வல்வெட்டித்துறை பருத்தித்துறைப் பிரதேசம்வரை மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கு உதவிபுரின்றது.
இவற்றை எல்லாம் நினைவுபடுத்தி அந்தளவிற்காவது தற்சமயம் வல்வை முன்னேற்றம் அடைவதற்கு உங்கள் இணையதளம் வசதியுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒரே செய்திகளை படிப்பதாலும் பார்ப்பதாலும் வல்வையை முன்னேற்ற முடியாது என்பது எமது தயவான கருத்தாகும்.
வல்வையின் சுற்றுலாத் தளங்களுள் எமது Images of Valvai யினையும் சேர்த்து எம்மை பெருமைப்படுத்தி அதை மேலும் வளம்படுத்த உற்சாகத்தை தந்தமைக்காகவும், எமது செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றியமைக்காகவும் நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் கூறி விடைபெற்றுக் கொள்கின்றோம்.
எங்கள் சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் வல்வை மண்ணில் பதிப்போம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.