Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழர் நாம் - நம் குழந்தைகளுக்கு - வைத்திடுவோம் தமிழ்ப்பெயர்கள் - வ.ஆ.அதிரூபசிங்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2013 (வியாழக்கிழமை)

தமிழர் நாம் - நம் குழந்தைகளுக்கு - வைத்திடுவோம் தமிழ்ப்பெயர்கள்

குழந்தைகளுக்குப் "பெயர் வைத்தல்" என்பது, பெற்றோர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பே, அக் குழந்தை ஆணாக இருப்பினும் - பெண்ணாக இருப்பினும் - என்ன பெயர் வைப்பது எனத் தீர்மானித்துக்கொள்வது எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாக உள்ளது.

குழந்தை பிறந்தபின்பு, சோதிடம் பார்த்து, எண்களை மனதிற்கொண்டு, எண்களின்  கூட்டுத்தொகை அடிப்படையிலே அதிட்ட எண்ணைத் தெரிவு செய்தும், பெயரின் முதல் எழுத்து எதுவாக அமைதல் வேண்டும் எனத் தீர்மானித்தும் பெயர் வைத்தலும் எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது.

இச் சந்தர்ப்பங்களில் ஆண்பால் விகுதிகளான அன், ஆன் மற்றும் ஒன் என்பனவற்றுள் ஏதாவது ஒன்றும் பெண்பால் விகுதிகளான அள்,ஆள், இ ,ஐ என்பனவற்றுள் ஏதாவது ஒன்றும் பெயரின் ஈற்றெழுத்தின் இறுதியில் ஒலி நயம் பயப்பக்கூடியதாகப் பெயர்களைத் தீர்மானித்தலும் பெயர் வைத்திடும் விடயத்திலே கருத்திலும், கவனத்திலும் கொள்ளப்படுதலும் ஒரு வழக்கமாக உள்ளது.

குழந்தைகளுக்குப் பெயர் வைத்திடும் சந்தர்ப்பத்தில் நம் பெற்றோர்களின் பெயர்களையோ அல்லது அவர்தம் பெயர்களை அடியொற்றியோ பெயர் வைத்திடுதலும் எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது. மறைந்த எம் முன்னோர்களின் நினைவுகள் நின்று நிலவும்படி அவர்தம் பெயர்களையோ அல்லது அவர்களின் பெயர்களின் ஒரு பகுதி வைத்திடும் பெயருடன் இணைந்ததாகவோ பெயர் வைத்தலும் எம்மிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது.

பெயர் வைப்பதற்கான காரணம் எதுவாக இருப்பினும் தமிழர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழிலே பெயர் வைத்திடுதல் எமது பாரிய கடமையாகும். எமது மொழிப்பற்றின் வெளிப்படையாகவும் அமையும். பிறந்த எமது குழந்தைகளுக்காகக் கொள்ளப்படும் ஒரு புனித நிகழ்வாக கொள்ளப்படும். இந்நிகழ்வு எமது மொழியுணர்வுடன் கூடியதாக அமைந்திருத்தல் வரவேற்கக்கூடியதல்லவா!.

நாம் விரும்பும் சில பெயர்கள் வடமொழி எழுத்துக்கள் பொருந்தியதாக இருப்பின் அவ்வெழுத்துக்கு மாற்றான தமிழ்மொழி எழுத்து அமைந்திடும் தன்மையில் பெயரைத் தீர்மானித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்குப் பெயர் வைத்திடும் பொழுது, கல்வி செல்வம், வீரம், என்றமைந்த தன்மைகள் பொருந்தியதாக எம்மாற் கொள்ளப்படும் வழிபடு தெய்வங்களை மனதிற்கொண்டும், இயற்கை சக்திகளை  மனங்கொண்டும், அவற்றுக்கு முதன்மை கொடுத்தும் பெயர்களை வைத்தல் எம்மிடையே பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமாக உள்ளது.

வழிபடு கடவுளருக்கு முன்னுரிமை கொடுத்திடும் நாம் எமது வழிபடு தெய்வங்களை மனதிற்கொண்டு அவற்றுக்கு முதன்மை கொடுத்து அவர்களுக்காக அமைந்துள்ள பெயர்களை மனங்கொண்டு நாம் விரும்பிய வகையிலே குழந்தைகளுக்குப் பெயர் வைக்கலாம்.

எமது சமய நோக்கியே சிவனுக்காக அமைந்துள்ள சிறப்புப் பெயர்கள்:-

சிவன் - அந்திவண்ணன், ஈசான், ஈஸ்வரன், உருத்திரன், உமாபதி, ஐம்முகன், கங்காதரன், கங்காளன், கங்கைவேணியன், கைலையாளி, காமநாதன், காலகாலன், கிரிசன், சங்கரன், சசிதரன், சதாசிவன், சந்திரசேகரன், சூலபானியன், திரிபுராந்தகன், திரியம்பகன், நீலகண்டன், பசுபதி, பரசுபாணி, பிறைசூடி, பூதநாதன், மங்கைபாகன், வாமதேவன், வேதாந்தன், வேதார்த்தன், அகிலகாரணன், திரியம்பன், நீலலோகிதன், விசுவேகன், அச்சுதன், அச்சுயன், தபனன், பிஞ்ஞகன் ..........

முருகன் - ஆறுமுகன் அரன்மகன், கடம்பன், குகன், கங்கை மைந்தன், கங்காபுத்திரன், சிலம்பன், சிகிவாகனன், குழகன், வேலன், மஞ்சையூர்தி, விசாகன், வாகுலேயன், சுரேசன், குறிஞ்சி வேந்தன், சேவற்கொடியோன், சேந்தன், கெளரி நந்தனன், கலையுணர்புலவன் ,  கார்த்திகேயன், காங்கேயன், சண்முகன், சுப்பிரமணியன், சரவணன், குருநாதன், சிவகுரு, மயூரவாகனன் ..............

விநாயகன் - அங்குசபாணி, லம்போதரன், ஏகதந்தன், ஏரம்பன், ஐங்கரன், கயமுகன் , கரிமுகன், அகுவாகனன், அம்பிகையன், கெளரிசேயன், விக்கினேஸ்வரன், இறைமகன்,  பாசாங்குகன், அரிமருகன், கணபதி லம்போதரன் ...................

திருமால் - அச்சுதன், அனந்தசயனன், திருநாதன், தாபிதன், உவணகேதணன், கருடகேதனன், சக்கராயுதன், சீதரன், சனார்த்தனன், திருநாதன், நாராயணன், பஞ்சாயுதன், பிருந்தாவணன், பதுமநாபன், மாதவன், முகுந்தன், வாசுதேவன், வைகுந்தன், கார்வண்ணன்,.........

உமை - ஆரியை, சாம்பவி, ஐயை, பராபரை, உருத்திரை, இந்திரை, இமயவதி, இமயவல்லி, பவானி, அம்பிகை, விமலை, கெளரிதேவி, அந்தரி, பார்வதி, பார்ப்பதி, சங்கரி, தருமச்செல்வி, மனோன்மணி, அபிராமி, உருத்திராணி, அயிராணி , காத்தியாயினி ................

சரஸ்வதி - காயத்திரி, சாவித்திரி, அபிராமி, பாரதி, பாமுதல்வி, பனுவலாட்டி, திருமங்கை,கலைமகள், வாணி, நாமகள், நாராயணி ........

இலக்குமி - திருமகள், அரிப்பிரியை, அபிராமி, இந்திரை, கமலை, பதுமாசினி, பதுமாலயை, பார்க்கவி, கோதநகை, இரமை, நளினி, விமலை.........

துர்க்கை - கொற்றலை, ஐயை, சண்டிகை, கார்த்திகை,கலையானத்தி, தேவிநாரணி, நாராயணி, பகவதி, பாலைக்கிழத்தி, விந்தை, விசயை, அம்பனத்தி, சுந்தரி, கலையூர்தி, கார்த்திகை ........

சூரியன் - அருணன், ஆதவன், ஆதித்தன், சித்திரபானு, பங்கயன், நபோமணி, விண்மணி, விரோசனன், அருக்கன், பதங்கன், விருச்சிகன், தபனன், திவாகரன், தினகரன், மாத்திரன், விகர்த்தனன் .........

சந்திரன் - அம்போதி, ஆசுகன், கந்தவாகன், பிரபஞ்சனன், பவமாகனன் ........

முனிவர்கள் - பதஞ்சலி, பராசுரன், வான்மீகன், வியாகரன், காசிபன், கெளதமன் , அங்கீரசன், துருவாசன்...........

அக்கினி - மைவாகனன், தனஞ்சயன், பாவகன், தீபதி, உதாசனன்.......

பண்பு சார் பெயர்கள் - பெண்கள்

கயல்விழி, தேன்மொழி, கனிமொழி, மலர் விழி, அறிவொளி, பூங்கோதை, அருட்பொய்கை, அருட் செல்வி,  கார்குழலி, மதிவதனி , பங்கயாசனி , இனியபாரதி , பொற்பாவை ….

பண்பு சார் பெயர்கள் - ஆண்கள்

அமுதகீதன், கமலவதனன் , அமுதகானன், அறிவழகன் , அன்பழகன், மெய்யழகன் , அறிவுடைநம்பி , இமயவரம்பன், கவிவலவன் , கவிராயன், கவிவாணன்………

வரலாற்றில் பெயர் பொறித்த தமிழ் மன்னர்கள்

அநபாயன், அதிகமான், சேரவாதன் , செங்குட்டுவன், சத்தியவிரதன், திருமாறன்,இரும்பொறை , இளஞ்சேரன், கரிகாலன், உதியஞ்சேரல் , சேரமான், திருமாவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், இளமாறன். இளசேஞ்ட்சென்னி, நல்லுருத்திரன், செங்கணான் , நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன், இளந்திரையன், தொண்டைமான், பேகன், திருக்கண்ணன், குமணன்,

மன்னர்கள்

இளங்குமணன், அதிரதன், இளவெளிமான், இளங்கோவன், இளங்கோ, சேரமான், ஆதனுங்கன், மலையமான், இராசேந்திரன், நல்லியக்கோடன், நன்மாறன்

பெயர் படைத்த புலவர்கள்

கபிலர், பரணன், மோசிகீரணன், வன்பரணன், இளநாகன், நக்கீரன், கல்லாடன், மாமூலன், நந்தத்தன், நம்பூதன், மாங்குடி மருதன் , உருத்திரங்கண்ணன், வள்ளுவன், தொல்காப்பியன், கெளதமன்

வ.ஆ.அதிரூபசிங்கம், B.A


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கரைக்குள் அடித்து வரப்பட்ட படகு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
மீன் படகுகள் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கடும் மழைக்கு மத்தியில் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் (படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
Maaveerar Naal (Great heroes day) observed amid flooding
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
மழை வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இலங்கையை ஒட்டி செல்லும் புயல், Fengal எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
சண்முகம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
கனமழை காரணமாக உடுப்பிட்டியில் வீட்டுக்குள் முதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2024 (புதன்கிழமை)
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Feb - 2023>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
678
9
1011
12
13
14151617
18
19
20
2122
23
24
25
262728    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai