கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரத்ததின் தொடர்ச்சியாக இன்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சகல முருகன் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்களில் நடைபெறவுள்ளது. வல்வெட்டிதுறைப் பிரதேசத்தில் வல்வை சிவன் கோவில், பொலிகண்டி கந்தவனம் சுப்ரமணியசுவாமி கோவில், தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆகிய கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அதாவது இன்று முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு, தேவமயிலாகவும் மாறி சேவைசெய்தார் என்றும், மேலும் இவர்களது திருமணம் முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் திருக் கல்யாணம் நடந்தது எனக் கந்தபுராணம் கூறுகின்றது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று (இன்று) காலையில் தெய்வானை திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பதாகவும், மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்வதாகவும், அதே நள்ளிரவில் முருகன் மற்றும் தெய்வயானை திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடப்பதாகவும் கந்த புராணம் கூறுகின்றது.
மறுநாள் (நாளை) சுவாமி, தெய்வானையுடன் வீதிவலம் வருவது மரபாகும்.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.