பருத்தித்துறைக்கு கிழக்காக சுமார் 200 கடல்மைல்கள் தொலைவில் வங்கக்கடலின் தாழமுக்கம்,
கரையோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2013 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் நேற்று திருகோணமைலைக்கு கிழக்காக சுமார் 400 கடல்மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் (Low Pressure) நேற்று நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது, மேலும் தீவிரம் அடைந்து பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) தற்பொழுது பருத்தித்துறைக்கு கிழக்காக சுமார் 200 கடல்மைல்கள் தொலைவில் உள்ளது.
முதலில் மேற்ககாக நகர்ந்து பின்னர் வட மேற்குத் திசையில் தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கும். இந்த இத்தாழமுக்கம் நாளை பிற்பகல் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையேயான கரையைகக் கடக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
நகர்ந்து வரும் இத்தாழமுக்கத்தினால், யாழ் தீபகற்பத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவுள்ளதையும் உள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதிலும் பருத்தித்துறையிலிருந்து, கட்டைக்காடு, நாகர் கோவில் மற்றும் வெற்றிலைக்கேணி உட்பட்ட சாலை வரையான பகுதிகள் கடற்பகுதிகள் பலத்த காற்றுக்கும் கடல் கொந்தளிப்புக்கும் உட்பட்டுள்ளன. மேலும் சராசரியாக யாழில் அசாதாரண காலநிலை தொடர்கின்றது.
கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த சூறாவளி இலங்கையின் யாழ்ப்பாணம், மற்றும் முல்லைதீவு கடல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதங்களை விளைவித்திருந்தது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
அத்துடன் சில தினங்கள் முன்பு பசுபிக் சமுத்திரத்தில் உருவாகி, கடந்த 8 ஆம் திகதி பிலிப்பைனைத் (Tacloban city, Leyte island, Philippines) தாக்கியிருந்த சூறாவளி ஹையான் (Typhoon Haiyan) மிக அதிகளவு சேதங்களை அங்கு ஏற்படுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.