வல்வை நகரசபையின் புதிய கட்டடத்தின் கட்டுமான வேலைகள் முடியும் நிலையில் உள்ளதாக அறிவிக்கபடுகின்றது , இதனை நேரில் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளிர்த்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது. இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி திரு.R.பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி என்பது குறிபிடத்தக்கது.
இந்த நகர நிர்மாணத் திட்டத்தின் கீழேயே நகரசபைத் திட்டத்தை விட , 1987 இல் சேதமடைந்த வல்வைச் சந்தை பொது கட்டடத்தின் புணருத்தாரண வேலைகள், வல்வை மீன் சந்தை, வல்வைப் பொது நூலகமும் பஸ் தரிப்பிடமும், மற்றும் கலாச்சார மண்டபம் போன்றன அமைப்பதற்கான வரைபடமும், திட்ட மதிப்பீடும் தயாரிக்கபட்டன என்பதும் குறிபிடத்தக்கது.
இவற்றில் 1987 இல் சேதமடைந்த வல்வைச் சந்தை பொது கட்டடத்தின் புணருத்தாரண வேலைகள், வல்வை மீன் சந்தை, வல்வைப் பொது நூலகத்துடன் கூடிய பஸ் தரிப்பிடம் ஆகிய வற்றின் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
ஒரு சில வருடங்கள் தடை பட்டிருந்த நகரசபைக் கட்டடத்தின் கட்டுமான வேலைகள் மீண்டும் இப்பொழுது 'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்' கீழ் உள்ள என்றிப் [Emergency Northern Recovery Project (ENReP)] திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புதிய நகரசபை
கலாச்சார மண்டப வேலைகள் இடமின்மையால் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், ஆஸ்திரேலியாவிலுள்ள நலன் விரும்பிகளால் கொடுக்கப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபாய்கள் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளன. கலாச்சார மண்டபம் ஆனது, வாடி ஒழுங்கைக்கும் ஆலடிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் (பழைய விறகு டிப்போ) அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.