வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் திரு.ஜ.கா. ரஞ்சனதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.Dr .K மயிலேறும்பெருமாள் (முன்னாள் வல்வை அரசினர் மருத்துவமனை மாவட்ட வைத்திய அதிகாரி ) அவர்களும், கருத்தரங்கில் விசேட கருத்துக்களை திரு.பசுபதி சிவானந்தன் (தொழில் வழிகாட்டி ஆலோசகர் வடமராட்சி வலயக்கல்விப்பணிமனை ) அவர்களும், திரு T .இலங்கேஸ்வரன் (manager CINEC Jaffna campus ) அவர்களும், Capt .R .இராஜேந்திர (VaiSWA) அவர்களும், திரு.இரா .அகிலன் (உதவிப்பணிப்பாளர் vocational training authority ) அவர்களும், திரு. கே.சாந்தகுமார் (Lecturer Jaffna technical college ) அவர்களும், திரு சபேசன் (NITA manager ) அவர்களும் வழங்கினார்கள்
கருத்தரங்கில் பல்வேறுபட்ட தொழில் பயிற்சி தொடர்பான நிறுவனங்களை சேர்ந்த விரிவுரையாளர்கள் வந்திருந்ததோடு கப்பல் துறை தவிர்ந்த ஏனைய தொழில் பயிற்சி தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
அத்துடன் வடமாராட்சியில் அதாவது வல்வெட்டித்துறையிலிருந்து வரும் இளைஞர்கள் எண்ணிக்கையை ஏனைய இடத்துடன் ஒப்பிடும் பொழுது தொழில் பயிற்சியை பெறுவதில் பின்தங்கியுள்ளனர் என்று கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் .
ஏனைய தொழில் பயிற்சிகளையும் பெற்று ஒரு சமுகம் சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் முன்னேற்றம் காண முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.
தொடர்ந்து நிர்வாக சபைத்தெரிவு இடம்பெற்றது. பழைய உறுப்பினர்களே தொடர்ந்தும் நிர்வாகத்தில் இருப்பதற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து VaiSWA வின் உத்தியோக பூர்வ இணையதளமான www.valvaimalumikal.com இன்று திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 01.30 மணி வரை நீடித்திருந்த இக்கூட்டத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் உள்பட வல்வை பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
capt sivanesan (srilanka)
Posted Date: December 30, 2013 at 17:59
The endeavour by the Vaiswa team to bring down high professional advisers to the annual general meeting and seminar is highly appreciated.
The youth of VVT should not waste precious time in waiting for sea faring jobs alone.All will not get the opportunity as it is highly competitive.
So the youths must take heed of the advises of the professional persons and follow technical courses and qualify themselves to get more opportunities.By this they can fulfill their aspirations and ambitions in life.
My kind regards and best wishes to all.
sivanesan
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.