வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், யாழ் உட்பட்ட வடக்கு பகுதியில் கடும் மழை, பலத்த காற்று உருவாகவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014 (சனிக்கிழமை)
இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்காக தாழமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது. இந்திய, இலங்கை நேரப்படி இன்றுகாலை 0830 மணியளவில் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 112 கடல் மைல்கள் தொலைவில், அகலாங்கு 9.00 வடக்கு, நெட்டாங்கு 83.0 கிழக்கு என்னும் பகுதியில் இத் தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது.
இது மேலும் அழுத்தம் குறைந்து அதி தீவிர தாழமுக்கம் ஆகி (depression) மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட (North of Lattitude 9.50N, யாழ் மாவட்டத்துக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் இடையில்) கரையோரப் பிரதேசத்தை நாளை மாலை (5 ஆம் திகதி) கடக்கவுள்ளது. இதனால் யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை உட்பட்ட மட்டக்களப்பு வரையான பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் கடும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இலங்கைக்கு தெற்கு கரையோரப் பகுதிகளான யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கவுள்ளதுடன் பலத்த காற்றும் வீசவுள்ளது.
தாழமுக்கத்தின் எதிர்பார்க்கப்படும் பாதை
Next update of Valvettithurai.org is on 05.01.2014 Am
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
capt s.sivanesan (srilanka)
Posted Date: January 05, 2014 at 07:25
The weather map is superbly printed and give precise details of the movement of cyclone.a person who does not have expert knowledge can understand very well.
I really appreciate your professionalism
sivanesan
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.