உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும், மானுடபாகமும் என்னும் நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்களின் தலைமையில் இப்புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. திரு நீலகண்டன் நித்தியானந்தன் (மென் பொருள் பொறியியலாளர், பழைய மாணவர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, திரு .ந. அனந்தராஜ் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவப்பிரமஸ்ரீ ச.வைத்தியநாதக்குருக்கள் (பிரதமகுரு கந்தவனம் திருவருள்மிகு கல்யாண வேலவர் சுவாமி தேவஸ்தானம்) அவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து, பேராசிரியர் கி.விசாகரூபன் (தலைவர் தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களினால் வாழ்த்துரையும், மற்றும் திருமதி இ.தில்லையம்பலம் (ஒய்வு பெற்ற ஆசிரியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) அவர்களினால் வெளியீட்டுரையும் வழங்கப்பட்டது.
இவைகளைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. தொடர்ந்து நூல் அறிமுகவுரை, நயப்புரை, ஆய்வுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கப்பட்டது. இறுதி நிகழ்வாக கல்லூரிக்கீதம் இசைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.