போர்த்துக்கல் நாட்டின் உதைபந்தாட்ட சூப்பர் ஸ்டார் "எஸேபியோ" (Eusebio) மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2014 (திங்கட்கிழமை)
இவருக்கு இன்று உலக உதைபந்தாட்ட கழகங்கள், வீரர்கள், ரசிகர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்துகின்றனர். எல்லோராலும் செல்லமாக கரும் சிறுத்தை (Black Panther) என அழைக்கப்பட்ட எஸேபியோ (Eusebio) தனது 71ஆவது வயதில் மாரடைப்பால் (05/01/2014) ஞாயிற்றுக் கிழமை காலை மரணமடைந்துள்ளார்.
உலக உதைபந்தாட்ட வரலாற்றில் இவரின் பெருமை தனித்துவமானது தான். மொசாம்பிக் நாட்டில் பிறந்து, தனது அபார விளையாட்டுத் திறமையால் முன்னணி வீரனாக உயர்ந்தார்.
1961ஆம் ஆண்டு இவரின் 19 ஆவது வயதில் போர்த்துக்கல் நாட்டின் Benifica Club £7,500 க்கு இவரை ஒப்பந்தம் செய்து தனது கழகத்திற்கென வாங்கியது. அன்று தொடங்கிய Benifica Club இன் வளர்ச்சி 15 வருடங்களாக தொடர்ச்சியான வெற்றியில்
திளைத்தது.
இவரின் விளையாட்டுத் திறமையால், Benifica Club 4 தடவைகள் ஐரோப்பா கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
மின்னல் வேக ஓட்டம், புல்லட் வேக அடி, எந்தப் பந்தையும் லாவகமாக எதிர்கொண்டு முன்னேறும் புத்திசாலித்தனமான விளையாட்டு என இவர் மைதானத்தை ஒரு கலக்கு கலக்கி விடுவார். இவரின் இந்த வேக விளையாட்டைப் பார்த்து இவரை கரும் சிறுத்தை என அழைக்க் ஆரம்பித்தார்கள்.
பின்னர் போர்த்துக்கல் நாட்டுக்கே இவர் விளையாட,1966 ல் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் இவரால் போர்த்துக்கல் 3 ஆம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இந்தக் கரும் சிறுத்தையின் அபார விளையாட்டுத் திறமையால் தான் அன்று போர்த்துக்கல் நாடு முன்னிலைக்கு வந்தது.
இன்று உலகம் பூராவும் எல்லா ஊடகங்களிலும் இவரின் மறைவைப் பற்றிய செய்தி தான் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.
உதைபந்து வீரர் எஸேபியோவின் சாதனைகள்
Portuguese Cup - 1962, 1964, 1969, 1970, 1972 European Cup - 1962 World Cup third place -1966 European Footballer of the Year -1965 European Footballer of the Year runner-up - 1962, 1966 European Golden Boot - 1968, 1973 European Cup top scorer - 1965, 1966, 1968 FIFA World Cup Golden Boot - 1966 Portuguese League top scorer - 1964, 1965, 1966, 1967, 1968, 1970, 1973
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.