பனிக்கட்டிக்குள் சிக்கி நின்ற ரஷ்ய ஆராய்ச்சிக் கப்பல் 14 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2014 (புதன்கிழமை)
Hobrat (Capital of the Australian state of Tasmania) என்னும் இடத்தில் இருந்து கடந்த கார்த்திகை மாதம் 28 ஆம் திகதி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயணிகள் என 75 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஆராய்ச்சிக் கப்பலான "Akademik Shokalskiy” கடந்த 24/12/2013 இல் தஸ்மானியாவிலிருந்து 1500 கடல்மைல் தொலைவில், பூமியின் தென் துருவமான அண்டார்டிகாவின் (Antarctic) கடும் பனிக்கட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டது.
இரண்டு வாரமாக இந்தக் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டிருட்டிருந்த சீனாவின் "XUE LONG" எனும் பனி உடைக்கும் கப்பலும் (Ice Breaker), பிரெஞ்சு நாட்டின் "L'ASTROLABE" எனும் பனி உடைக்கும் கப்பலும் பெரும் முயற்சி எடுத்து தோல்வி கண்டன. இதில் சீனாவின் "XUE LONG" கப்பலும் பனிக்கட்டிக்குள் இறுகி நின்றது.
பின்னர் அவுஸ்திரேலியாவின் "AURORE AUSTRALIS" எனும் பனி உடைக்கும் கப்பலின் கடும் முயற்சியும், காற்றுடன் கூடிய பனிப்பொழிவு (heavy snow) மற்றும் கடும் புகார் (Poor Visibility) காரணமாக வெற்றி பெறவில்லை.
இதன் பின்னர் "XUE LONG" ல் இருந்த உலங்கு வானூர்தியின் மூலமாக மாலுமிகள் 22 தவிர்ந்த, பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என 53 பேர் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டு “AURORE AUSTRALIS’” என்னும் கப்பலில்
ஏற்றப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் இறுதியாக நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்ட சீனாவின் "SNOW DRAGON" எனும் பனி உடைக்கும் கப்பல் (Ice Breaker), 14 மணி நேர போராட்டத்தின் பின்னர், நேற்று செவ்வாய்கிழமை மாலை (பெய்ஜிங் நேரம் 6.00 மணியளவில்) பனிக்கட்டிகளை உடைத்துக் கப்பலை மீட்டுள்ளது.
கீழே கப்பலில் இருந்து மாலுமிகளும் ஆராய்ச்சியாளர்களும் பனிக்கட்டியில் சிக்கி இருந்த பொழுது எடுத்த புகைப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறித்த படங்கள் சம்பந்தப்பட்ட Salvage company இல் இணையதளத்திலிருந்து பெறப்படவையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.