யாழ்ப்பாணத்தில் இருக்கும் வழுக்கியாறு நீர்ப்பாசன வாய்க்காலும் பருவகால ஆறுமாகும். 103 ஆறுகளில் பட்டியலில் சேர்க்கபப்டவில்லை. எனினும் (<100km ) ஆறுகள் வகைப்படுத்தலுக்குள் இருக்கின்றது.
தொண்டைமான் ஆறு ( lagoon ) என்பது வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு உவர்நீர் தடாகமாகும். Lagoon பட்டியலுக்குள் வருகிறது.
கட்டுகரைகுள்ம. தண்ணி முறிப்பு குளம் உட்பட பல ஆயிரக்கணக்கானவை இந்த 103 ஆறுகள் வகைக்குள் வராது. பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் அணைக்கட்டுகள் பட்டியலுக்குள் வருகின்றது
பராக்கிரம பாகு, சேனாதி சமுத்திரம், நச்சதுவ வெவ Nachchaduwa wewa உட்படவைகளும் இந்த பட்டியலுக்குள் வராது. நீர்த்தேக்கம் / Reservoir பட்டியலுக்குள் வருகின்றது.
****************
நீருற்றுக்கள்
அருவிகள்
நீர்த்தேக்கங்கள்
இலங்கையின் 103 ஆறுகள் இரண்டு வகையில் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றன.
1 கங்கா : வருடம் முழுதும் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து ஆறுகளும் கங்கை என்றும்.
2. ஓயா : பருவகால நீரோடைகள் ஓயா என்றும் அழைக்கப்படுகின்றன.
பட்டியலிடப்பட்டிருக்கும் 103 ஆறுகளில் சுமார் 20 வருடம் முழுவதும் பாய்ந்தோடும் நதிகளாக இருப்பதுடன் எஞ்சியவை பருவகாலங்களில் பெருகி பாய்ந்கோடும் நதி வகைகளுள் அடங்கும். விசாலத்தின் அடிப்படையில் நதிகளின் அளவும் வேறுபடுவதுடன் இவை சுமார் 10 சதுர கிலோமீற்றர் தொடக்கம் 10000 சதுர கிலோ மீட்டர் வரை வேறுபடும். பெருமளவிலான நீரூற்றுக்கள் தீவு முழுவதும் பரந்து விரிந்து காணப் படுகின்றது. பாசனத்திற்காகவும் மின்சாரத்திற்காகவும் பல ஆறுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. மகாவலி கங்கை மீதான விக்டோரியா திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமாகும்.
இலங்கையில் ஆறுகளின் பெரும்பலானவை மத்திய நாட்டில் உற்பத்தியாகி நகரங்கள் ஊடாக கடலை நோக்கி சென்றடைகின்றன. தீவு முழுவதும் இதுவரை இனங்காணப்பட்டுள்ள நீரூற்றுகளின் எண்ணிக்கை 3540 ஆகும்.
நுவரெலியா மாவட்டத்தில் 1544
கண்டி மாவட்டத்தில் 204
குருநாகல் மாவட்டத்தில் 319 ,
மொனராகலை மாவட்டத்தில் 210
மாத்தளை மாவட்டத்தில் 288
இவை தவிர இலங்கையின் உலர்வலய பிரதேசங்களில் நிலத்திற்கடியில் சுண்ணாம்பு கற்பாறைகளு க்கிடையில் அமைந்துள்ள நீர் பரப்புகளும் இலங்கையின் நீர் மூலங்களுள் முக்கிய இடம் வகிக்கின்றது. குடிநீர் தேவைக்கும், விவசாய செய்கைகளுக்கும் தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலக்கீழ் நீர் பரப்புகள் பெரும் பங்காற்றுகின்றன. அதேபோன்று உலர் வலயப் பிரதேசங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் சிலவற்றை இணைப்பதன் மூலம் ஆக்கப்பட்ட அருவி தொகுதி இலங்கையின் நீர் வளத்தை பேணி பாதுகாப்பதில் மிக முக்கிய பங்களிப்பை செய்கின்றன.
225 இற்கும் மேற்பட்ட வெப்பநீரூற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 120 இதற்கும் மேற்பட்டவை மலைநாட்டுப்பகுதிகளில் பரந்துள்ளன. திருகோணமலையில் உள்ள கண்ணியா நீரூற்று பிரசித்தி பெற்ற ஓர் நீரூற்றாகும்.
அருவிகள் 382
மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன.
இலங்கையின் நீர்வீழ்ச்சிகளின் முழுமையான பட்டியலை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்ட Lanka Council on Waterfalls 382 அருவிகளை பதிவு செய்திருக்கிறது. 10 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 200 நீர்வீழ்ச்சிகள் பெரும்பாலானவை மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.
12,000 சிறிய நீர்த்தேக்கங்களில் பெரும்பான்மை உலர் வலையத்தில் அமைந்துள்ளது.
இலங்கையின் நீர்த்தேக்க நிர்மாணிப்புகள் பண்டைய நாகரிகத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். சில பெரிய நீர்த்தேக்கங்கள் ( 700 ஹெ )2000 வருடங்கள் பழமையானவை. இலங்கை நீர் தேக்கங்களின் மொத்த பரப்பளவானது ஏறக்குறைய 170 000 ஹெ. தீவின் மொத்த பரப்பளவை 65 000 km பரப்பளவோடு ஒப்பிட்டால் ஒவ்வொருKm பரப்பளவுக்கும் ஏறக்குறைய 2.6 ஹெ. நீர்த்தேக்கங்கள் உள்ளன.
1. 73 பெரும்பான்மை நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் (பண்டைய காலத்தின் )
2. 160 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள்
3. 10,000 க்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் ( இந்தச் சிறு நீர்த்தேக்கங்களில் அதிகமானவை பருவ கால நீர்த்தேக்கங்கள் ஆகும் )
5. 7 உயர்நில நீர் மின்சார உற்பத்தி நீர்த்தேக்கங்கள்
இலங்கையின் மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானபாசனக்குளங்கள்,
அணைக்கட்டுக்கள், ஏரிகள், வாய்க்கால்கள்,வாவிக்களாக
வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளை நேரம் வாய்க்கும் போது தமிழ் படுத்தி பகிர்கின்றேன்.
***
முன்னைய பதிவின் பின்னூட்டங்களுக்கான தேடலில் …!!
1. வழுக்கியாறு பருவகால ஆறாகும் (<100km ) வழுக்கி ( கை )ஆறு வாய்க்காலெனவும் ( நீர்ப்பாசனத்துக்கான ஆற்றுப்பகுதிகள் அழைக்கப்படுகின்றது. இது தெல்லிப்பளையில் உருவாகி தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.
2. தொண்டைமானாறு
தொண்டமனாறு குளம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு உவர் நீர் தடாகமாகும், இது சுமார் 7800 ஹெக்டேர் (30 சதுர மைல்) பரப்பளவும் சராசரியாக 1.5 மீட்டர் ஆழமும் கொண்டது. 1953 ஆம் ஆண்டில், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் குளத்தின் முகத்துவாரத்திலிருந்து 400 மீற்றர் தொலைவில் வான் கதவுகளுடன் ஒரு தடுப்பணையை நிறுவியது. இந்த தடுப்பணை முதன்மையாக கடல் நீர் தடாகத்தில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டது. மழை நீரைச் சேகரித்து, உப்புத்தன்மையைக் குறைப்பதன் மூலம், தடுப்பணை குளத்தின் உவர் நீரை நன்னீராக மாற்றியது.
3. தண்ணிமுறிப்புக்குளம்
அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் மத்திய பகுதிகளில் உற்பத்தியாகி கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்குத் திசைகள் நோக்கிப் பாயும் பல ஆறுகளை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவை தேக்கம் என்ற தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. கல்லாற்றை மறித்து பாவற்குளம், அதனைத் தொடர்ந்து மூன்று ஆறுகள் சந்திக்கும் மூன்று முறிப்பில் மற்றும் ஓர் அணைக்கட்டு கட்டி நீர்த்தேக்கம், நாயாற்றை மறித்து தண்ணி முறிப்புக் குளம், பாலியாற்றை மறித்து பாலிக்குளம், பேராற்றை மறித்து மண்மலைக்குளம் (முத்தையன்கட்டு) அதற்கு அடுத்து கருங்கல் தூண்களை அடுக்கி அடுக்குக்கல்லு அணைக்கட்டு கட்டப்பட்டு மற்றும் ஒரு நீர்த்தேக்கம் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை ஆஙகிலேய வரைபடங்களில் நீர்த்தேக்கம் என்பதற்குப் பதிலாக தேக்கம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 சேனநாயகசமுத்திரம்
அம்பாறை மாவட்டம் சேனநாயக்க சமுத்திரம் "Inginiyagala Reservoir" கல்லோயா பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இங்கினியாகலவில் உள்ள 2 மலைகளுக்கு இடையில் கல் ஓயா மற்றும் பிற சிறிய ஆறுகளை அணைக்கட்டி சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது.
5.பராக்கிரமசமுத்திரம்
பொலனறுவை குறுகிய தடங்களால் இணைக்கப்பட்ட ஐந்து தனித்தனி நீர்த்தேக்கங்களை (தோபா, தம்புட்டுலு, எராபாடு, பூ, கட்டு டாங்கிகளை கொண்ட ஆழமற்ற நீர்த்தேக்கம் ஆகும்.
புவியியல் மற்றும் அளவியல் தன்மை காரணமாக இலங்கை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகும். 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு. களுகங்கை, களனிகங்கை, மல்வத்து ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆகிய 4 ஆற்றுப் படுகைகள் 2000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கின்றன
தமிழ் மொழியில் ...
நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்ற ஆறுகளை குறிக்கும்.
ஆறு:
நிலத்தை நீரால் பிரிக்குமளவுக்கு ஓடுகின்ற நீர்ப்பாய்வுகள்
ஓடை :
இறங்கிக் கடக்குமளவுக்கு ஓடும் நீர்வழி
நீரூற்று
தரையின் கீழிருக்கும் நீரானது இயற்கையாகத் தரையின் மேல் பாயும்போது அல்லது தேங்கும்போது அதனை நீரூற்று என்கின்றோம்.
தரவில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
உறுதிப்படுத்திய பின் திருத்தி விடுவேன்.
நகலெடுத்து பதிவோர் மூல இணைப்பையும் சேர்த்து விடுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.