இத்தாலி நாட்டில் 2004 ஆம் அண்டு கட்டப்பட்ட இந்தச்சொகுசுக் கப்பல் 2/9/2005 இல் வெள்ளோட்டம் (Sea Trail) கண்டது. £372 மில்லியன் பெறுமதியான இந்தக்கப்பல், 293 மீட்டர் நீளம் கொண்டது. Titanic கப்பலை விட இரண்டரை மடங்கு பெரியது.
மொத்தம் 13 தட்டுக்கள் (Decks), இதில் 15000 படுக்கை அறைகள் (Cabins), 4 நீச்சல் தடாகங்கள் (Swimming Pools), 5 உணவு விடுதிகள் (Restaurants), 5 Cinemas என மிக நீளும் பட்டியலைக் கொண்ட கட்டுமானங்களையும் வசதிகளையும் கொண்டிருந்தது Costa Concordia.
3229 பயணிகளுடனும் 1023 சிப்பந்திகளுடனும் (Crew) கடந்த 13/01/2012 இல் மத்தியதரைக்கடலில் (Mediterranean sea) பயணித்துக்கொண்டிருந்த போது இந்தக் கப்பல் இரவு 9.45 மணியளவில், இத்தாலி நாட்டில் உள்ள Isola Del Giglio எனும் ஒரு தீவின் பாறையில் மோதிவிபத்துக்குள்ளானது.
கப்பலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட பெரிய சேதம் காரணமாக தண்ணீர் வேகமாக உட்புகுந்து கப்பலின் இயந்திரப் பகுதிக்குள் (Engine Room) பரவி, கப்பலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் 3229 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் யாவரும் பெரும் சிரமத்தின் மத்தியில் அன்று காப்பாற்றப்பட்டிருந்தனர்.
இதில் 32 பயணிகள் மரணமானர்கள். கப்பல் தலைவனின் (Captain) கவனக் குறைவே இந்தப் பாரிய அசம்பாவிதத்திற்கு காரணம் என இன்றும் கப்டனுக்கு எதிரான வழக்கு நடைபெற்றுகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
500 பொறியியலாளர்கள், 50ற்கு மேற்பட்ட சுழியோடிகள் (Divers) 1000 ற்கு மேற்பட்ட சீமெந்து கட்டிகள் (Concrete Stacks) மற்றும் கடலுக்குக் கீழே 6 தட்டுக்கள் (Under water platform) அமைத்து, இந்தக் கப்பல் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் நிமிர்த்தி, கடந்த 17/09/2013 சகஜநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தாலி, இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ், சீனா மற்றும் நோர்வே என 6 நாடுகளைச் சேர்ந்த 10 ற்கும் மேற்பட்ட Salvage Company கள், இந்தக்கப்பலை வாங்கி அழிப்பதற்கு (Scrap செய்வதற்கு) போட்டியிட்டன.
ஆனால் இன்றைய செய்தியின்படி இங்கிலாந்து நாட்டின் Abel UK Ltd எனும் நிறுவனத்திற்கு தான் இறுதியாக கப்பலைப் பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது. இங்கிலாந்து நாட்டின் HARTLEPOOL என்னும் இடத்தில் இந்த அழிப்பு வேலைகள் நடைபெறவுள்ளன.
இதற்கு சுமார் 2 வருடங்கள் தேவையெனவும் £355 மில்லியன் செலவாகும் என்றும் இதனால் 200 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.
(கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் முதலாவது படமான Costa Fascinosa தவிர்ந்த ஏனைய படங்கள் கப்பல் சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து பெறப்பட்டவையாகும்)
Costa Fascinosa - Costa Concordia வின் சகோதரக் கப்பல் (Sister Ship)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.