நாளை மறுதினம் பரீட்சார்த்த பயணமாக பளை வரை வரவுள்ள புகையிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2014 (திங்கட்கிழமை)
நாளை மறுதினம் (15.01.14) பரீட்சார்த்த பயணமாக பளை வரை புகையிரதம் வரவுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் இதுவரை தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை புனரமைப்புக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி புகையிரத நிலையம் - Kilinochchi Railway station
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.