மறைந்த திரு.அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களுக்கு தீருவில் வி.கழகம் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2014 (புதன்கிழமை)
நேற்றைய தினம் அகாலமரணமடைந்த வல்வையைச் சேர்ந்த திரு. நாராயணசாமி அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களுக்கு தீருவில் விளையாட்டுக் கழகம் தமது கண்ணீர் அஞ்சலியை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு.
வல்வெட்டித்துறை தீருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற நாராயணசாமி மற்றும் மகமாசியம்மா தம்பதியரின் ஒரேயொரு செல்வப் புதல்வரான திரு.சந்திரன் அண்ணா (N.A.C) அவர்களின் மரணச் செய்தியால் தீருவில் விளையாட்டுக் கழகம்
பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
N.A.C என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திரு.சந்திரன் அண்ணா எமது கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் மிக முக்கியமான ஒருவர்.
இன்று வரை கழகத்தின் சகல வளர்ச்சிகளிலும் தன்னை ஈடுபடுத்தியதோடு மட்டுமில்லாமல் நிறைய நிதி உதவிகளையும் செய்து எம்மை எல்லாம் ஊக்கப்படுத்தியவர். கூடிய விரைவில் புதுப்பொலிவுடன் அமையப் போகும் எமது
கழக மைதானத்தின் வேலைத்திட்டம் சம்பந்தமாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கூட தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், எமது கழக மைதானத்தை யாழ்.
மாவட்டத்தில் ஒரு தரமான மைதானமாக அமைக்க வேண்டும் என எமக்கு அறிவுரைகளை வழங்கியதோடு மைதானத்தின் வாசலில் கழகப்பெயர் கொண்ட வளைவு அமைக்க தனது நிதி உதவியையும் வழங்குவதாகக் கூறியிருந்திருந்தார்.
வல்வையின் நலன்விரும்பி திரு. சந்திரன் அண்ணா அவர்கள், எமது கழக வளர்ச்சி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஊரின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர். சமீபத்தில் நடைபெற்ற சிதம்பராக் கல்லூரியின் வளர்ச்சி
பற்றிய செயற்பாட்டிலும் கலந்து கொண்டு நிதி உதவிகளைச் செய்து எம்மை ஊக்கப்படுத்தியவர். எந்நேரமும் ஊரின் வளர்ச்சிக்குக்கு தனது பங்களிப்பைத் தயங்காமல் செய்து வந்த ஒரு நலன் விரும்பியை நாம் இன்று இழந்துவிட்டோம்.
வல்வெட்டித்துறையில் தனது இளம் வயது முதற்கொண்டு நீச்சல் போட்டி, சைக்கிள் ஒட்டப்போட்டி என எப்போதுமே ஒரு சாதனை விளையாட்டு வீரனாகத் தன்னை அடையாளப் படுத்தியவர். புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட
திரு.சந்திரன் அண்ணா, ஆரம்பத்தில் தனது புகைப்படத் தொழிலை வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து பின்னர் தமிழகத்தின் திருச்சி மற்றும் லண்டன் என தனது தரமான புகைப்படக் கலையை தொடர்ந்திருந்தார்.
எல்லோரோடும் இனிமையாக சிரித்த முகத்தோடு அன்போடு பழகும் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் திரு. சந்திரன் அண்ணா அவர்களின் குடும்பத்தினருக்கு எமது கழகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.