வல்வை ஆதிகோவிலில், ஆதிசக்தி முதியோர் சங்கம் கடந்த 19.07.2026 அங்குரார்பணம் செய்யப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற கிராம அலுவலர் திரு. பரமசிவம் குமரேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. மனுசங்கர், ஹாட்லி கல்லூரி ஆசிரியர் திரு. கமலகாந்தன், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் திரு சிறீக்காந், திரு நிரஞ்சன் ஆகியோரும் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களும், கௌரவ விருந்தினர்களாக கிராம மட்ட அனைத்து பொது அமைப்புக்களும் கலந்து சிறப்பித்தனர்.
அனைத்து முதியோருக்கும் முதியோர் அடையாள அட்டை வழங்குதல். புதிய யாப்பு அங்கிகரித்தல், முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட முதியோருக்கு பொருட்கள் வழங்குதல், தேவையானோர்களுக்கு கட்டில்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.