நீரோட்டத்தினால் பருத்தித்துறை கடற்பரப்பில் வந்தடைந்த மூங்கிலான வீடு, பெருமளவு மக்கள்
பார்வையிடுகின்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2014 (வியாழக்கிழமை)
யாழ் வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை முனையை அண்டிய கடற்பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை மூங்கிலான வீடு ஒன்று தென்பட்டுள்ளது. இதை அப்பிரதேச மீனவர்கள் அதனை கட்டி இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.
இவ்வகை வீடுகள் கிழக்காசியாவின் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் பாவனையில் உள்ளவையாகும்.
இந்த மூங்கில் வீடு தற்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காலநிலையினால் உருவாக்கியுள்ள நீரோட்டம் காரணமாக தாய்லாந்திலிருந்து வந்திருக்கலாம் எனப் பெரிதும் ஊகிக்கப்படுகின்றது. அதாவது வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காலநிலை நிலவி வரும் காலமான கார்த்திகை தொடக்கம் பங்குனி வரையான காலப் பகுதியில் காற்றானது வடக்குத் தொடக்கம் வடகிழக்குத் திசையில் வீசுவதுடன், இதனால் வங்காள விரிகுடாவில் நீரோட்டமானது மணிக்கூட்டுத் திசையில் இலங்கையின் கிழக்குத் திசைநோக்கி வருவது வழமை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.