“வல்வையின் பிரபலங்கள்” என்ற தலைப்பில் எடுத்துள்ள முயற்சி புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது - திரு.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2014 (வியாழக்கிழமை)
அண்மையில் நாம் புதிதாக ஆரம்பித்துள்ள “வல்வையின் பிரபலங்கள்” பற்றி வாசகரும் வல்வையின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான டென்மார்க்கில் வசிக்கும் திரு.செல்லத்துரை அவர்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஆழமான கருத்தின் தன்மை கருதி வாசகரின் கருத்தை எதுவித மாற்றமின்றி கீழே பிரசுரித்துள்ளோம்.
வல்வையின் பிரபலங்கள் என்ற தலைப்பில் நீங்கள் எடுத்துள்ள முயற்சி இணையப்பக்கத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.
வாரத்திற்கு ஒரு தடவை பார்த்த என்னுடைய மனதில் புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் தினசரி பார்க்கும் நிலைக்கு வந்துள்ளேன்.
வல்வையின் எத்தனையோ பிரபலங்களை அறிந்த என்னால் இவரை இம்முறை வெளியான மாணிக்கவாசகரை அறிந்திருக்க முடியவில்லை.. எழுதிய அண்ணன் சத்துருசங்கார வேலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
காங்கேசன்துறையில் இருந்து ரயில் வண்டி ஏறிய ஒருவர் பொல்காவலையில் இறங்கி நின்று வந்த இடத்தை மறந்து பொல்காவலையை பேசுவதுபோல இன்றைய வாழ்வு மாறியிருக்கிறது.
ஆகவே வேர்களை அடையாளம் காட்ட இதுபோன்ற முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவை.
வல்வையின் வரலாற்றை பதியும் முயற்சிகளில் காலத்திற்குக் காலம் ஈடுபடும் பணியாளருக்கு இதுபோன்ற எழுத்துக்களே உதவியாக அமையும்.
அதேவேளை இதுவரை வல்வைபற்றிய எழுதிய எழுத்துருவாக்க மரபில் புதியதோர் பரிணாமும் ஆரம்பிக்கப்பட வேண்டியிருக்கிறது.
உலகப்பந்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற ஒப்பீட்டு அடையாளம் இருக்கும்போதுதான், எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் வல்வையை நிலை நிறுத்த வசதியாக அமையும்.
நமது வல்வையைவிட குறைவான இலக்கைத் தொட்ட உலக நாடுகளின் பல ஊர்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன.
உதாரணம் ஒன்றுமே செய்யாத நொக்கியா என்ற பின்லாந்து ஊர் கைத்தொலைபேசியால் நொக்கியா என்ற ஊர் உலக மக்களால் உச்சரிக்கப்பட்டது எப்படியென்று சிந்திக்க வேண்டும்.
டெசேட் ஒப் த விலேஜ் என்ற இரண்டாம் உலக யுத்த உலகக் காவியத்தில் இடம் பெற்ற ஊர்போல உலக இலக்கியமாக இடம்பெறக்கூடிய தகுதி வல்வைக்கு இருக்கிறது.
வல்வையை உலகத்தின் உச்சிப்புள்ளிக்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட உலக வல்வை ஒன்றியம் அப்படியொரு நோக்கத்தை கொண்டிருந்தும் அதை எம்மால் புரிய வைக்க முடியவில்லை.
வல்வையை வல்வையருக்குப் புரிய வைப்பது ஒரு பணி.. வல்வையை உலகத்திற்கு புரிய வைப்பது இன்னொரு பணி.
புக்கர் பரிசு பெற்ற அருந்ததிராயுடைய நாவல் ஒரு கோயில் கிராமத்தை உலகத்திற்கு புரிய வைத்தது.
அதை வெற்றி நாவலாக மேலை நாடுகள் தேர்வு செய்தபோது உலகத்தின் முக்கியமான நிகழ்வுகள் நடந்தபோது உ.ம் வியட்நாம் போரில் அமெரிக்கப்படைகள் நகர்ந்ததற்கு அமைவாக அந்த நிகழ்வுகளுடன் பொருத்தியிருந்ததால்
வெளிநாட்டவரால் அதை உணர முடிந்தது.
அப்படி வல்வை உலக ஊர்களின் வளர்ச்சியுடன் பொருத்தப்பட வேண்டும்.
அண்மையில் வல்வைக்கு போன் செய்து நண்பர் ஒருவருடன் பேசியபோது அவர் வல்வையில் வாசிப்புபழக்கம் குன்றிவிட்டதாக தெரிவித்தார்.
யாழ். நூல்நிலையம் எரிந்ததாக அழும் நம்மவர் அதைவிட பல சிறந்த நூல்கள் நமது சிதம்பரா நூல் நிலையத்தில் இருந்ததை அடையாளம் கண்டு சொல்லவில்லை என்பதையும் நாம் இன்னமும் பேசவில்லை.
இந்தியாவிலிருந்து வள்ளங்களில் நம்மவர்களால் இறக்கப்பட்ட நூல்களை வாசித்த வல்வையின் வாசிப்புப் பாரம்பரியத்தையும் வளர்க்கும்போதே இத்தகைய படைப்புக்கள் வல்வை மக்களையே சென்றடையும்.
எழுதும்போது இவைகளையும் மனதின் மூலையில் இருத்தி எழுதினால் பணி மிக உயரத்தைத் தொடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Your above quote is absolutely true.
There are much more info still remain unrevealed due to various reasons which includes the unwillingness or lack of interest in focusing on the particular individual subjects even though those are not completely subsurface in VVT history.
-S.Manivannan, Colombo.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.