மிகவும் சிறப்புடன் நடைபெற்ற இந்திரவிழா- ஆயிரக்காணக்கானோர் கண்டுகளிப்பு (முழுபடத்தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவத்தின் நேற்றைய இறுதி திருவிழாவின் மாலை நேரத்தில் ஆரம்பித்திருந்த இந்திரவிழா எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறப்புடன் நடைபெற்றிருந்தது. இவ்விழாவின் நிகழ்வினை காண்பதற்காக ஆயிரக்காணக்கானோர் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர்.
இந்திரவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் ரேவடி விளையாட்டுக்கழக மைதானத்தில் பஜனையுடன் ஆரம்பமான கலை நிகழ்வுகளான ஆடல், பாடல், தனி நடனம், குழு நடனம் மற்றும் சிலம்பாட்டம் போன்றன நடைபெற்றிருந்தன.
வல்வை மதவடி இளைஞர்களின் ஏற்பாட்டில் மதவடியில் சாந்தன், சுகுமாரின் இசைக்கச்சேரி நடைபெற்றன. அத்துடன் ஊரிக்காடு இளைஞர்களின் ஏற்பாட்டில் சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் ராகம்நதியின் இசைக்கச்சேரி இடம்பெற்றன.
இவ் இந்திரவிழாவுடன் தொடர்புடைய எமது முன்னைய செய்திகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.Manivannan (SrilLanka)
Posted Date: May 16, 2014 at 15:26
இது ஒரு முழு அளவினாலான இந்திரவிழா அல்ல.
சமூக ஒற்றுமை சீரழிக்கப்பட்ட காரணத்தினால் இடையூறுகளுக்கு ௨ள்ளாக்கப்பட்டு, சிதைந்துபோன இந்திரவிழாவில் இறுதியில், மினுக்கமாக , நின்றுபிடித்த சில பகுதிகளாக, ௨யிரோட்டத்துடன், திட்டமிட்டபடி செய்து முடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட சில கலைப்படைப்புகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுமுடிந்த சில மேடைக்கலைநிகழ்வுகளும் அமைந்திருந்தன.
பரந்த எதிர்பார்ப்புகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக்கொடுத்த, பாரம்பரிய வழமைக்கு மாறாக நடந்துமுடிந்த இந்த சோபை குறைந்த விழாவினை, ௨ள்ளதை ௨ள்ளபடி சொல்வதைத்தவிர்த்துவிட்டு "வெகு விமரிசையாக நடந்த இந்திரவிழா" என வல்வைக்கு வெளியே இலங்கையிலும், புலம்பெயர்ந்தும் வாழும் எம் சமூகத்துக்கு அடையாளப்படுத்துவது முறையற்றது.
சூழ்நிலை காரணமாக குறைப்பிரசவமான சிசுவினை வசதியான கோணங்களில் படங்கள் எடுத்து ஆரோக்கியமான, சுகப்பிரசவமான குழந்தை என குறுகிய லாபங்களுக்கக நடுநிலைதவறி விளம்பரிப்பது நெறியற்றது என்பது எனது தாழ்மைான கருத்து.
மீண்டும் குண்டுச்சட்டியினுள் குதிரைச்சவாரிக்கு சமூகத்தை வழி நடத்தாதீர்!!!...
ஏற்க்கனவே இப்படியான குண்டுச்சட்டியினுள் குதிரைச்சவாரி விட்ட பலனை எம் சமூகம் நீண்ட காலத்துக்கு அனுபவித்துக்கொண்டு இருக்கிண்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.