இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின: மோடி தலைமையிலான பாஜக அமோக வெற்றி!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2014 (வெள்ளிக்கிழமை)
நடந்து முடிந்த இந்தியாவின் 16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 337 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 58 தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் 148 தொகுதிகளையும் கைபற்றியுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுதும் 7 கட்டங்களாக வாக்கெடுப்பு நடைபெற்று இன்று காலையிலிருந்து முடிவுகள் அறிவிக்கபட்ட வண்ணம் உள்ளன.ஏலவே கருத்து கணிப்புகள் மோடியை பிரதமர் வேட்பாளாராக கொண்ட பாஜகவே வெற்றி பெறும் என்று கூறியிருந்தாலும்,பாஜகவுக்கு இப்பிடியான ஓர் அமோக வெற்றியையும், காங்கிரசுக்கு மரண அடியையும் யாரும் எதிர்பாத்திருக்கவில்லை.
ஆட்சியமைக்க 273 ஆசனங்களே தேவையான நிலையில் பாஜக தனித்தே 285 ஆசனங்களை வென்றுள்ளது.பாஜகவின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி தான் போட்டியிட வாரணாசி,வதோரா தொகுதிகளில் வரலாறு காணாதளவு லட்ச கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதேவேளை பாஜகவின் ஏனைய தலைவர்களான அத்வானி,சுஷ்மா சுவாராஜ்,ராஜ்நாத் சிங், வெற்றி பெற்றுள்ள அதேவேளை அருண் ஜெட்லி பின்தங்கியுள்ளார்.சுயேற்சையாக போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்யும் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் ஆரம்பத்தில் பின்தங்கி காணப்பட்டதாக அறிவிக்கபட்டு பின் தற்போது முன்னிலை வகிப்பதாக அறிவிக்கபட்டுள்ளார்.இதேவேளை சோனியா காந்தி ரேபரலி
தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை
தளுவியுள்ளார். அதேநேரம் இக்கட்சியில் போட்டியிட்ட கூடங்குளம் அணுமின்னுலை எதிருப்பு போராட்ட தலைவர் உதயகுமாரும் தோல்வியை தளுவியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக 39 ஆசனங்களில் 38ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் மட்டும்தான் ஜெயலலிதாவின் இருப்பு என்பதையும் அதிமுக தொண்டர்களின் அடுத்த பிரதமர் அம்மா என்ற கோசங்கள் வெறும் பேச்சுக்கு மட்டும்தான் என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியுள்ளது.
மொத்தத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார சுலோகமான "ABKI BAAR, MODI SARKAR" இம்முறை மோடி அரசாங்கம் என்று மோடி அலை இந்தியா முழுதும் அடித்துள்ளது.
இதற்கு முந்தைய தேர்தல் 2009ல் நடந்தபோது, இலங்கையில் இறுதி கட்ட போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இலங்கையின் அயல் தேசம் இந்தியாவின் தேர்தல் முடிவுகள் உற்று நோக்கபட்டிருந்தது. இம்முறை பெரியளவில் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமையை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.