புயல் 'நிலாம்' சென்னையை மாலை 5 மணியளவில் கடக்கின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2012 (புதன்கிழமை)
புயல் (Tropical cyclone) 'நிலாம்' சென்னையை மாலை 5 மணியளவில் கடக்கின்றது. பலத்த காற்றின் காரணமாகவும், இடைவிடாத மழையினாலும் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக யாழ்பாணத்தின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர பகுதிகள், அறியப்படுகின்றது.
வல்வெட்டித்துறையில் கடந்த 2 நாட்களாக 'நிலாம்' புயலினால் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சிவன் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 தேர்கள் பலத்த காற்றின் காரணமாக சரிந்து சேதமடைந்துள்ளன.
படங்களில் நகரும் புயலின் எதிர்பார்க்கப்படும் பாதையும், செய்மதிப் படமும் காட்டப்படுள்ளன. இன்று மாலை சென்னையைக் கடுக்கும் புயலானது, அதன் பின்னர் படிப் படியாக பலமில்க்கவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.