Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இன்னுமொரு அன்னபூரணியா? (இரண்டாவது கட்டுரை) வல்வையில் கப்பல் கட்டுவதற்கான தேவைகள் என்ன உள்ளன? - கலங்கரை விளக்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)
எனது முதலாவது கட்டுரையில் கடந்த எழுபத்து ஐந்து வருடகாலத்தல் கப்பல் கட்டுவதற்கு அதிமுக்கிய காரணங்களாகிய 'கப்பல் கட்டும் தேவை' மற்றும் 'அரசாங்க உதவி' என்பவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது பற்றியும் மற்றயை பல காரணங்களில் வல்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் பார்த்தோம்.
 
அத்தோடு இந்த இரண்டு காரணங்களையும் நன்கறிந்து அவற்றை வென்றெடுப்போமாயின் வல்வையில் கப்பல் கட்டும் பணி திரும்பவும் தழைத்தோங்கும் என்றும் பார்த்தோம்.
 
 
இரண்டாவது கட்டுரையில் இங்கு 'வல்வையில் கப்பல்கள் கட்டுவதற்கான தேவைகள்' என்ன உள்ளன என்று பார்ப்போம்!
 
எந்தப் பொருளையும் உற்பத்தி செய்ய முன்னர் அப்பொருளை யாரும் வாங்குவார்களா? அல்லது ஏற்கெனவே விற்கப்படும் விலைக்கு குறைவாக (ஆனால் தரத்தைக் குறைக்காது) உற்பத்தி செய்து விற்க முடியுமா? என கண்டறிதல் வேண்டும். அந்தப் பொருள் தேவைப்படுகிறது என்று அறிந்தபின்னர் தான் அதைச் உற்பத்தி செய்தல் புத்திசாலித்தனமானது. அத்தோடு அவற்றை விற்பதனால் லாபம் கிடைத்தல் வேண்டும். அந்த லாபம்தான் பொருளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய காரணமாகின்றது. லாபம் என்றவுடன் பணத்தை மாத்திரம் கருத்தில் எடுக்காது ஊர்மக்களின் முன்னேற்றமும் லாபம் எனக்கருதலாம். Investing in people என்று ஆங்கிலத்தில் கூறுவர் அதாவது மக்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்தல் என்று பொருள்படும்.
சில வேளைகளில் தங்கள் சொந்தப் பாவனைக்காக தாங்களே ஒரு பொருளை உற்பத்தி செய்வர். உதாரணமாக, பல மீன் பிடி வள்ளங்களை வைத்து மீன்பிடிக்கும் நிறுவனம், தாங்களே படகுகளை கட்டும் பணியையும் செய்யக்கூடும். இங்கு இலாபம் கருதாது (தரம் குறைந்ததாக இருந்தாலும்) தங்களுடைய சொந்தப் பயிற்சியாளர்களைக் கொண்டு படகுகளை கட்டத் தொடங்குவர். நாளடைவில் அவற்றின் தரம் கூடும் போது படகுகளை இலாபகரமாக விற்க முடியும்.
சில சமயங்களில் சில பொருட்களை உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கு அதாவது நட்டத்திற்கு விற்பர். ஏனெனில் நட்டம் ஏற்பட்டாலும் வேறு விதமான இலாபங்கள் அதில் அடங்கியிருக்கலாம். உதாரணமாக (மேலே கூறியபடி மக்களில் முதலீடு செய்தல்) ஒரு அரசாங்கம் கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிப்பதற்காக அதாவது மக்களிள் திறமையில் முதலீடு செய்வதற்கா நட்டம் வந்தாலும் தமது நாட்டில் கப்பலைக் கட்டி (அதை உள் நாட்டிலேயே பாவித்து) மக்களின் தொழில் நுட்பத் தராதரத்தை உயற்றுவர். அதுவே சில் வருடங்களில் திறமையுடைய கப்பல் கட்டும் தொழிலாளர்களை உருவாக்குவதோடு கப்பல்களும் தரமானதாகி லாபகரமாக விற்கக் கூடிய உற்பத்தி நிலையை அடைந்து விடும்.
ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு முக்கியமான காரணங்களைப் பார்த்தோம். இன்னும் பலவிதமான தேவைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.
 
நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விசயத்தைக் கூறாது வௌ;வேறு விடயங்களை ஆராய்வது போல இருக்கலாம்! தொடர்ந்து படியுங்கள்!
 
கப்பல் கட்டுதல் பற்றி சற்று விரிவாக எங்களுக்கு தெரிந்திருத்தல் அவசியம். அறிவோம்!
 
முதலாவதாக, கப்பல் என்றவுடன் பலரின் மனதில் ஏற்படும் எண்ணம் ஆயிரக்கணக்கான தொன்கள் நிறையுடைய பெரிய கப்பல்களே! ஏனெனில் தமிழில் 10 தொன் நிறையுடைய மீன்பிடிக்கும் கடல் வாகனத்தைம், 6000 அரிசி மூட்டைகளை (300 தொன்கள்) ஏற்றக்கூடிய அன்னபுரணியையும், 100,000 தொன் நிறையுடைய பெரிய மசகு எண்ணெய் ஏற்றும் tanker யையும் 'கப்பல்' என்றுதான அழைக்கிறோம்.
 
 
அடுத்ததாக, பண்டைய கால கப்பல் கட்டும் முறையோடு ஒப்பிடுகையில் தற்காலக் கப்பல் கட்டும் முறை மிகவும் மாறுபட்டுள்ளது. அதாவது பழைய கப்பல் கட்டும் மேஸ்த்திரிமார்களின் முறையோ அல்லது பாய்மரக்கப்பல்களோ தற்காலிக கப்பல் முறைகளுடன் போட்டியிட முடியாது. எனவே கப்பல் கட்டும் முறையும் நவீன மயமாக்கப்படல் வேண்டும். பழைய கப்பல் கட்டும் மேஸ்திரியார்களின் அனுபவமும் நவீன தொழில் நுட்பமும் சேர்க்கப்படும் போது பல நன்மைகள் உருவாகும்
 
வல்வையில் பாய்க்கப்பல் கட்டுவதில் ஈடுபட்ட சகலருக்கும் நவீன கப்பல் கட்டுவது ஒரு புதிய விடயம். அதாவது நவீன் கப்பல் கட்டும் கலை முதலில் இருந்து தொடங்கப்படல் வேண்டும். முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்பது சிறிய படகு கட்டுதலைத் தொடக்கமாகக் கொள்ளலாம்.
 
சிறிய படகுகள், பெரிய வள்ளங்கள், வத்தைகள், என்று படிப்படியாக முன்னேறி மீன்பிடி கப்பல்கள் என்று முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். 
 
 
அடுத்ததாக முக்கியமான விடயமான 'வல்வையில் கப்பல் கட்டும் தேவை' பற்றிப் பார்ப்போம்!
 
1. வல்வையர்களின் தன்மானம்
அன்ன்பூரணி கப்பலின் பின்னர் வருடாவருடம் ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கினறோம். நாங்கள் கப்பல் கட்டும் பரம்பரை ... ஒரு நாள் திரும்பவும் கப்பல் கட்டி உலகிற்கு காட்டித்தான ஆவோம் என்ற ஒரு இறுமாப்பு ... ஒரு வருடம் பத்து வருடமாகி பத்து ஐம்பதாகி எழுபத்து ஐந்து வருடங்களும் உருண்டோடி விட்டன ... இன்னமும் ஆண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் ... வருடங்கள் செல்ல செல்ல பொறுப்புணர்ச்சி குற்ற உணர்வாக மாறிக் கொண்டிருக்கின்றது. சிறிய வள்ளங்கள் படகுகள் கட்டுமான போன்றவற்றை மேமப்டுத்தியாவது சிறிய கப்பல் கட்டவேண்டும் என்று பலரின் மனங்கள் மௌனமாக அலறிக் கொண்டிருப்பது அவரவர்களுக்குத்தான் தெரியும்! இனியாவது இந்த எழுபத்து ஐந்தாவது வருட விழாவை முன்னிட்டு வல்வையின் உறுதித்தன்மையைக் காக்க வேண்டி இது சம்பந்தப்பட்ட அனைவரும் தொடர்புகளை ஏற்படுத்தி கப்பல் கட்டுதலுக்கான அடிக்கல் நாட்டுதல் வேண்டும்.
 
2. உள்ளுர் மீன்பிடி படகுகளின் தேவை
உள்நாட்டில் பெரிய கப்பல்கள் தேவையில்லை. ஆனால் மீன்பிடி வள்ளங்களின் தேவை உள்ளது. கண்ணாடி இழைக அல்லது (f)பைப (g)கிளாஸ் (Reinforced glass fibre) இனால் செய்யப்பட்ட சிறிய படகுகளின் தேவை உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் அதிக நீர்பரப்பைக் கொண்டுள்ள பிரதேசம். இந்திய மீனவர்கள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கன்றனர் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே சரியான முறையில் மீன்பிடிக்கப்பட்டால் படகுகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அதாவது யாழ்ப்பாணக் குடா நாட்டில் மீன்பிடி வள்ளங்களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே போகும் எனலாம்.
 
3. இலங்கைத் தீவில் மீன்பிடி வள்ளங்களின் தேவை இருந்து கொண்டே இருக்கின்றது.
இலங்கை மீன்பிடியினால் கணிசமான அளவு வருமானத்தை பெறுகிறது. யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்றைய இடங்களில் சிறந்த மீன்பிடி படகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்குப் போட்டியாக ஊரில் உற்பத்தி செய்வதற்கு சில காலங்கள் பிடித்தாலும் வல்வையர்கள் கூட்டுச் சேர்ந்தால் கட்டாயம் மற்றையவர்களுடன் போட்டி போட முடியும். எனவே முதல் சில காலம் (தராதரம் உயரும் வரை) வள்ளங்கள் நட்டத்தில் விற்க வேண்டிய நிலை உள்ளது. படகு கட்டும் திறமை (skill) கூடிக் கொண்டு வந்தபின்னர் லாபகரமாக விற்க முடியும். வல்வையர்களால் அது முடியக்கூடிய ஒரு காரியம்.
 
4. இலங்கையில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் தேவை உள்ளது
ஆழ்கடல் மீன்பிப்போர் இலங்கைத் தீவில் இருந்து சென்று மீன்பிடித்து வருகிறார்கள். பல வெளிநாட்டவர்கள் வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிரும் மீன்பிடிக்கின்றனர். அதற்காக இலங்கைக்கு வந்துதான் மீன் விற்க வேண்டுமோ அல்லது இலங்கையில்தான் மீன்பிடி கப்பலுக்குத் தேவையா அலுவல்களைச் செய்ய வேண்டுமோ என்றில்லை. ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஆழ்கடலில் நாட்கணக்கில் நின்று மீன்பிடிக்கக் கூடியதாக கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.  இலங்கையில் அவர்கள் பிடிக்கும் மீனை மீன்கள் அதிகம் விலை போகும் இடங்களில் விற்கலாம். எனவே ஆழ்கடல் மீன்பிடிகப்பல்களுக்கும் தேவை இருந்தவண்ணமே இருக்கும். தற்பொழுது சிலாபத்திலும் தென்இலங்கையிலும் சிறந்த ஆழ்கடல்மீன்பிடி படகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்து மகாசமுத்திரத்தில் இன்னமும் பல இடங்களில் (குறிப்பாக தெற்கு இந்து மகா சமுத்திரத்தில்) சரியாக மீன் பிடிக்கப்படுவதில்லை என்று ஒரு மேற்கத்திய ஆய்வு கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
5. வெளிநாடுகளில் இருக்கும் வல்வையர்கள் சமூகக் குழுக்கள் மற்றும் அங்கத்தவர்களது உதவியுடன் வெளிநாட்டில் எங்களது படகுகள் கப்பல்களை சந்தைப்படுத்தும் வசதி தற்பொழுது உள்ளது
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தையல் தைக்கும் இயந்திரங்களைத் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்கள். 
 
சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்களுக்கு தையல் இஙந்திரத்தைத் தந்துதவிதோடு மாத்திரமல்லாது அவர்களிடமிருந்து தைத்த ஆடைகளையும் (இலங்கையில் உள்ள பல கெடுபிடிகள், சிரமங்களின் மத்தியில்) சிறிதளவில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். 
 
அப்படியான செய்கைகள் இங்கு மக்களின் வேலை வாய்ப்புக்கு உறுதியைக் கொடுக்கின்றது. அத்தோடு அவர்களுக்கு ஆடைகள் சந்தைப்படுத்தும் சிரமத்தைக் குறைக்கின்றது. அதாவது உள்ளுரில் ஆடைகளை விற்க முடியாவிட்டாலும்கூட ஆடை தயாரிப்பில் துணிவுடன் இறங்க முற்படுவர். இதுவே ஆடைகள் உற்பத்தித் திறன், தராதரம் ஆகியவற்றை அதிகரிக்கின்றது. இது படிப்படியாக ஏற்றுமதித் தராதரத்திற்கு உயர்ந்து விட வாய்ப்புக்கள் நிறைய உண்டு.
 
முதலில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த அடைகளை (குறைந்த விலைக்கு) வாங்கி இங்கிருப்போரை ஊக்கமளித்து தொடர்ந்து ஆதரவளித்தால் நிச்சயமாக ஆடைகளின் தராதரம் உயரும். ஆடைகளின் தரம் அதிகரிக்கும் போது இலங்கையர் அல்லாத மற்றைய வெளிநாட்டவர்களும் வாங்கக் கூடிய நிலை உருவாகும். இதையே ஆங்கிலத்தில் Niche Market என்று கூறுவர்.
 
இங்கே இரண்டு விதமான நன்மைகள் ஏற்படுகின்றள. முதலாவது நாளாவட்டத்தில். இங்கு யாழ்பாணத்தில் தையற்காரரின் திறமை மற்றும் ஆடைகளின் உற்பத்தித் தரம் (quality) கூடிக் கொண்டு போகின்றது. இரண்டாவது வெளிநாட்டில் கிடைக்கும் லாபத்தில் கணிசமான அளவு திரும்பவும் அவர்களின் முன்னேற்றத்திற்கே பாவிக்கப்படுகின்றது.
 
இதே வியாபார முறை படகுகள் கட்டுமானத்திற்கும் பாவிக்க முடியும்! படகுகள் (ஆடைகளைப் போலல்லாது) குறிப்பிட்ட தரம் இல்லாவிடின் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த முடியாது. ஆனால் வல்வையில் உள்நாட்டு உற்பத்தியின் போது பெறவிருக்கும் பயிற்சி, திறமான படகுகள் செய்வதற்கு வழிகோலும். 
 
'படகுகளின் பாவனைகள் அங்கே வெளிநாடுகளில் நிறைய உள்ளன, எனவே தராதரமான படகுகளைச் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த முடியும'; எனறு வெளிநாடுகளில் வாழும் வல்வையர்களுக்கு நன்கு தெரியும். இத்தகைய சந்தைப்படுத்தக் கூடிய வசதி படிப்படியாக வல்வை வாழ் மக்களின் கப்பல் கட்டும் கனவை நனாவாக்க முடியும்.
 
6. இளைஞர்களுக்கு கப்பல் கட்டுவதில் நேரடி வேலை வாய்ப்புக்கள்
கப்பல் கட்டுவதற்கு பட்டப் படிப்பு (Naval architect) உடையோர் பலர் அவசியமாகின்றது. ஆனால் படகுகள் கட்டுவதற்கு ஒருவர் படித்திருந்தால் போதுமானது. மற்றையோருக்கு பழகும் ஆர்வம் இருந்தாலே போதும். படகு கட்டும் போது படிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சாதாரணமான மீன்பிடி படகு (வள்ளம்) கட்டுவதற்கு அவைகளின் அளவபை; பொறுத்து இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையாகலாம். எனவே தொடர்ந்து வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். அத்தோடு பல இளைஞர்கள் வேலை பழக வாய்ப்பு கிடைக்கின்றது.
 
 
இளமையில் ஏதோ காரணங்களினால் படியாத இளைஞர்கள், மரவேலை, வரைபடமுறை (drawings), திட்டமிடல் (Boat Design), கணக்காளர் (Accounting), சந்தைப்படுத்துதல் (Marketing) போன்ற துறைகளில் செய்முறைப் பயிற்சி பெறும் வாய்ப்புக்களை உருவாக்கலாம். வெளிநாடுகளில் பெரிய படிப்புக்கள் இல்லாவிடினும் பயிற்சிப் படிப்பு (Vocational Education) வசதிகள் உள்ளது. அங்கே அதை second chance என்று கூறுகின்றனர். அதாவது இளமையில் ஏதோ காரணத்திற்காகப் படிக்க முடியாவிட்டாலும் வயது வந்தபின்னர் (திருந்தியபின்னர்) வேலை பழகும் போது படிப்பதற்கு இன்னுமோர் சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது.
 
7. கப்பல் கட்டுவதில் மறைமுகமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன
ஒரு படகு கட்டும் தொழிலில் மறைமுகமாக பல வேலைகள் நடை பெறவேண்டியிருக்கும். படகுக்குத் தேவையான மரம், boat, engine, paint மற்றும் fibre glass போன்ற மூலப்பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டுவருதல், படகு ஏற்றி இறக்குதல் சம்பந்தமான வேலைகள் (கமகாரர்கள் என்று கூறுவர்), வேலையாட்களுக்கு உணது வினியோகம், படகு கட்டுமான படிப்பு முறை கற்றல் (boat building course) கல்விக் கூடமும் ஆசிரியரும், படகு பார்வையிடுவோர், வாங்குபவர்கள் தரகர்கள் ஆகியோரின் பயணம், தங்குமிடவசதி, உணவு இப்படி பல விதமான மறைமுக வேலை வாய்ப்புக்களுக்கு இடமுண்டு. மற்றும் நாங்கள் கட்டிய படகுகளை நாங்களே மீன்பிடிக்கப் பாவித்தால் மீன் சந்தைப்படுத்துதல் சம்பந்தமான இன்னும் பல நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் உருவாகும்.
 
8. உலகத்தில் உள்ள வல்வை நலன்களில் அக்கறையுள்ள சங்கங்களினதும் வல்வைப் பிரமுகர்களினதும் மற்றும் புத்திஐPவிகளினதும் மனக்குறைகள் இதுவே
 
வல்வையை முன்னேற்றத் துடிக்கும் உள்ளநாடு வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவரினது மனதிலும் உள்ள ஆதங்கங்கள், குறைகள் சில கீழே தந்துள்ளேன்:
 
கப்பல் கட்டும் துறையில் உள்ளவர்களும் கப்பல்துறைபற்றி அறிய ஆவலாக இருக்கும் இளைஞர்களும் முன்வந்து வல்வையில் படகு கட்டும் துறையை தொடக்கித் தாருங்கள் என்று தங்களை உதவி கேட்க மாட்டார்களாமே!
இங்கு நிகழ்வுகளுக்கு தலமை தாங்க அழைக்கின்றனர் வல்வையில் தங்களுக்கு மாலைகள் அணிவித்து கௌரவிக்கின்றார்களே அதே நேரத்தில் எங்களுக்கு படகு கட்டுவதற்கான உதவியைச் செய்து தாருங்கள் என்று கேட்க மாட்டார்களாமே!
அரசாங்க அதிகாரிகளாக இருக்கின்றோம். பலவகைகளில் அரசாங்க உதவிகள் பெறமுடியும் ஆனால் முயற்சியுடன் முன்வருகிறார்களில்லையே!
குறைந்தது சிறிய படகு கட்ட எங்களுக்கு வசதி செய்து தாருங்கள் என்று கூடக் கேட்கலாமே!
பாடசாலைகளில் எங்களுக்கு படகு கட்டுவதற்கான அறிவு வளரக்கூடய புத்தகங்களை வாங்கித்தாருங்கள் என்று உபாத்தியாயர்கள் கேட்கலாமே!
பிரத்தியோக கல்விக்கூடங்களில் வயது வந்தோர்களுக்காய படிப்புமுறை தொடங்கப்பட்டு அதில் படகுகட்டும் கலையைத் தொடங்க உதவிசெய்து தாருங்கள் என்று கேட்க மாட்டார்களா?
பாலர் பாடசாலைகளில் பிள்ளைகள் விளையாட விளையாட்டுப் படகுகளும் பாதுகாப்பான தண்ணீர்த் தொட்டிகளும் வாங்கித் தாருங்கள் என்று கேட்கலாமே!
வல்வை வாசகர்சாலையில் நாவல்கள் வேண்டாம் மீ;ன்பிடிப்பதற்கான மற்றும் படகுகள் கப்பல்கள் கட்டுவதற்கான புத்தகங்களை வாங்கித்தாருங்கள் என்று கேட்கலாமே!
அங்கு வீட்டு வளவில் ஒருவர் சென்று மீன்பிடிக்கக்கூடடிய படகை மேலை நாட்டில் கட்டுகிறார்களாம். வல்வையில் எனது வளவில் அப்படி கட்டுவதற்கு உதவுவீர்களா என்று யாராவது முன்வருவார்களா!
வெளிநாட்டில் படகுகள் கட்டுவதைவிட இங்கு ஊரில் மிகக் குறைந்த விலையில் படகுகள் கட்ட முடியும் நீங்கள் வெளிநாடுகளில் சந்தைப் படுத்த முடியுமா என்று கேட்க மாட்டார்களாமே!
 
9. வல்வையின் பெருமை மறுபடி கொடிகட்டிப்பறக்கும். ஆனால் அதை எவரும் அகற்ற முடியாத கொடியாக இருக்கும். அதாவது வல்வை மக்களின் திறமையில் முதலீடு செய்தல் வேண்டும்
'படகு கட்டுமானம்' என்பதை, ஒரு பெரிய பொறுப்புள்ள நீண்டகால கடின உழைப்பினால்தான் நிறைவேற்ற முடியும். வீடுகள் அல்லது கட்டடங்களோ அல்லது கப்பல் கட்டும் மூலப் பொருட்களோ அல்லது கட்டப்பட்ட படகுகளோ அழிந்து போகக் கூடும் ஆனால் மக்களில் முதலீடு செய்யப்பட்ட திறமை அனைத்தும் வல்வை மக்களுடனேயே காலா காலமாக இருக்கும் அதை எவரும் எங்களிடமிருந்து பிரித்து விடமுடியாது. 
 
கட்டிய படகு ஒரு நாள் காணாமல் போகலம் மறுநாள் படகு கட்ட முடியாத நிலை வந்து விடலாம். அல்லது படகும் படகு கட்டும் வளவும் அங்குள்ள சாமான்கள் அனைத்தும் துர்அதிஸ்டவசமாக எரிந்து போய்விடக்கூடும். ஆனால் திரும்பவும் எங்களால் படகு கட்ட முடியும். அந்த வல்லமையை எவரும் எங்களிடமிருந்து எடுத்து விடமுடியாது. நாங்கள் உலக தராதரத்தில் படகு கட்டப் பழகிவிட்டோமாயின் அந்தத் திறமையை பாவித்து உலகில் எந்த மூலையிலும் படகு கட்ட முடியும். 
 
எனவே என்ன கஸ்டம் வந்தாலும் மக்களில் முதலீடு செய்யப்படல் வேண்டும். அதில் ஒரு பாகமாக நாங்கள் படகு கட்டப் பழகுதல் வேண்டும். 
 
முடிவாக எங்களது நோக்கம்!
 
'உலக தாரதரத்திற்கு ஏற்ப படகுகளைக் கட்டப் பழகுதல்'.
 
நாம் அனைவரும அன்னபூரணியின் எழுபத்து ஐந்தாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் போது அன்று அவர்கள் என்ன நினைத்து மனதிடத்துடன் கப்பல்களைக் கட்டினார்களோ அதே மனதிடம் திரும்பவும் வல்வையர்களுக்கு வரப்பெற்று திரும்பவும் கப்பல் கட்டும் தொழில் இங்கு மிளிர வேண்டும். அதுவே நாங்கள் அவர்களுக் செலுத்தும் நன்றிக்கடன். அப்பொழுதுதான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும். அது வல்வையர்களால் நிச்சயம் முடியும். You can, If you think you
can (நினைத்தால் நிச்சயம் முடியும்) என்று ஆங்கிலத்தில் கூறுவர். வல்வைக் காளையர்கள் நினைத்தால் நிச்சயம் அதைச் செய்து முடிப்பர்!
 
எனது அடுத்த கட்டுரையில் அரசாங்க உதவி எப்படிப் பெறுவது? அல்லது அரசாங்கத்தின் கெடுபிடிகளை இல்லாமல் செய்வது எப்படி? என்று விபரமாகப் பார்ப்போம்.
 
நன்றி! வணக்கம்!!
கலங்கரை விளக்கம்.
 
எமது குறிப்பு 
 
1) Photos by Valvettithurai.org, taken in a foreign ship yard.
2) கட்டுரையாளர் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், தனது பெயரைக்குறிப்பிடவில்லை. இது எமக்கு ஏற்புடையதன்று.    ஆனாலும் கட்டுரையின் கருப்பொருளின் தன்மை கருதியும், கட்டுரையில் சச்சைக்குரிய விடயங்கள் இல்லை என்பதாலும் நாம் பிரசுரிக்கின்றோம்.
 
Admin/Valvettithurai.org

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 1997>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai