தீருவில் பொதுப் பூங்கா வரும் 11ம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2013 (சனிக்கிழமை)
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" ஆனது வரும் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது என நகரசபை வட்டாரங்களிலிருந்து வல்வெட்டித்துறை.org ற்கு தெரியவருகின்றது.
இது சம்பந்தமான முடிவுகள் நேற்றைய நகரசபை உறுப்பினர்கள் மட்டத்திலான கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.N.இராசநாயகம் (மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை) அவர்களும், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஜெயசீலன் (பிரதேச செயலர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறைப் பிரிவு) அவர்களும் திரு.ஜோகானந்த ராசா (பிரதேச வன வள பரிபாலன அதிகாரி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வின் பொழுது பூங்கா அமையவுள்ள பகுதிகளில் மரங்கள் நாட்டப்படவுள்ளமையும் குறிபிடத்தக்கது.
அமையவுள்ள இப்பூங்கா, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் 400m தூரத்தில் அமைந்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய எமது முன்னைய செய்திகள்:
1) தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.