தற்போது நகரசபையினால் வல்வெட்டித்துறை நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்கு பின்னால் (பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக) திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வாரத்தின் 7 நாட்களும் மதியம் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்கி வருகிறது.
ஏற்கனவே முற்கூட்டியறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நகர சபையால் உழவு இயந்திரங்கள் மூலம் கழிவகற்றல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதில் கழிவகற்றலை மேற்கொள்ள முடியாத மக்களுக்காக இந்த வசதி நகர சபையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தங்களது கழிவுகளை கடதாசி| காட்போட், ஏனைய உக்கக் கூடிய கழிவுகள், பிளாஸ்ரிக், கண்ணாடி, தகரம், இலத்திரனியல் கழிவுகள் , ஏனைய உக்க முடியாத கழிவுகள் என தரம் பிரித்து இவ்விடத்தில் வழங்க முடியும்.
பொது இடங்களை அசுத்தப்படுத்தாது நகரை தூய்மையாக பேண இவ்விடத்தை முழுமையாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இதற்கு மேலதிகமாக, மிக அதிகளவான கழிவுகளை ஒரே தடவையில் அகற்ற வேண்டுமெனின் அதற்குரிய கட்டணத்தை நகர சபையில் செலுத்தி அச்சேவையையும் நகரசபையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.