Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்று நாயகன், சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், ஒரு நாள் கிரிக்கெட் டிலுருந்து (ODI - One Day International) இன்றிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டதட்ட 74 -84 க்கிடையில் வல்வெட்டிதுறையிலிருந்து ' CROSS WORLD NAVIGATION' என்ற சிங்கப்பூர் கம்பெனி கப்பல்களுக்கு Cadet ஆக போனவர்கள் பலர். இப்படி போவதற்கு முக்கிய காரணமாக அப்போது அந்த கம்பெனியின் முக்கிய நிர்வாகியாக இருந்த எமது ஊரைச் சேர்ந்த மணிவாசகம் அவர்களாக்கும்.
யாழ். குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் கடந்த 20 ஆம் திகதி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டு வரும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் இன்று கொற்றாவத்தை றேன்சஷ் வி . கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வல்வை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்களுடன், தைத்திருநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் வரும் 30.12.2012 அன்று கல்லூரி மண்டபத்தில் காலை 0900 மணிக்கு நடைபெறவுள்ளது. விபரங்கள் கீழே இணக்கப்பட்டுள்ளன.
வல்வையில் சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கபட்ட வானொலிப் பெட்டியைப் படங்களில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்ட வானொலிப் பெட்டி பற்றிய விபரங்கள், வல்வெட்டித்துறை.org இற்காக, இவ்வானொலிப் பெட்டியின் உரிமையாளரின் உறவினரால் தரப்பட்டுள்ளது.
புற்றளை வினஷ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்திவரும் 10 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால்இறுதியாட்டம் நேற்று (புதன்கிழமை) உபயகதிர்காமம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
உலகெங்கினும் வாழும் நல்லோர் உதவியுடன் வல்வையர் பெருமைப்படும் விதத்தில் ஒரு சிறப்பான விஞ்ஞான ஆய்வுகூடத்தினை எம் தமிழ் சிறார்களுக்காக அமைத்துக் கொடுத்துள்ளது - Chithambara College Well-wishers Network (CWN) அறிக்கை
2012 G.C.E (O/L) இல் தோற்றிய மாணவர்களுக்கான (2015 G.C.E (A/L) கணித, விஞ்ஞான பிரிவுகளில் தோற்றும் மாணவர்களுக்கு) திசைமுகப்படுத்தலும், நவீன ஆய்வு கூட ஆய்வுகூட செய்முறை வெளிப்படுத்தலும், யாழ் வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரும் 21/12/2012 அன்று நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி நீரூற்று மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக, மதிய சுற்றாடல் அதிகாரசபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பெயரிடும் இந்நிகழ்வு நேற்று (18.09.2012) நண்பகல் நடைபெற்றிருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் வருபவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர் என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நாடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வெட்டித்துறையிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பாக விநாயக ஷஷ்டி நோன்பு அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. இருபத்தொரு தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விரதம் கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை (29.11.2012) முதல் மார்கழி மாத வளர்பிறை ஷஷ்டி (18.12.2012) வரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வல்வை சிதம்பரக்கல்லூரி மைதானத்தில் ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் நாடாத்திவரும் கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது கால் இறுதியாட்டத்தில் இளவாலை யங்கென்ரிஷ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகம் மோதியது.
பதவிகள் வெற்றிடத்திற்கான இலங்கை அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல தரப்பட்ட வெற்றிடத்திற்கான விபரங்கள் தெரிவிக்கப்படுள்ளன. சம்பந்தப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாள், குறித்த பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியான உண்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரி இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடமும், ஜனாதிபதியின் செயலாளரிடமும் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது கால் இறுதியாட்டத்தில் பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் (5 : 1) என்ற கோல்கணக்கில் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியிட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.
வல்வை ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணத்தின் முன்னணி அணிகளுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது காலிறுதியாட்டம் நேற்று (சனிக்கிழமை) வல்வை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
VEDA வின் 2013 ஆம் வருடத்திற்கான தரம் 09, 10, 11 இற்குரிய புதிய வகுப்புக்கள் இன்று ஆரம்பமாகின்றது. இதற்குரிய சம்பந்தப்பட்ட அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு.இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சாந்தினி திருஞானசுந்தரம்,திருமதி.சந்திராதேவி சுபாஷ்சந்திரன், மற்றும் திரு.S.தவனேஷ்வரன் ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
புதிய கட்டிடத்திறப்பு விழா நாளை காலை 9 மணிக்கு திறக்கப்படும். இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு .இ .த .ஜெயசீலன் (பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை) கலந்து சிறப்பிக்கின்றார் .
இலங்கை ஹட்டன் நேஷனல் (Hatton National Bank) வங்கியில் 'பயிற்சி பெறும் வங்கி உதவியாளர்' (Trainee Banking Assistant) தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வங்கியின் சம்பந்தப்பட்ட விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்திருக்கும் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினது ஞாபகார்த்த வரவேற்பு வளைவு புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வளைவானது அவ் விளையாட்டுக் கழக உறுப்பினர் திரு.இரா.அரசரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக 1970 களின் பிற்பகுதிகளில் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று 12 ஆம் திகதி மார்கழி மாதம் 2012 ஆம் ஆண்டு ஆகும். நாள் மாதம் வருடம் ஆகிய முன்றும் 12 இல் வருவதாலும், இதே போல் ஒரு நாள் இனிமேல் வரமுடியாது என்பதாலும், இதை ஒரு அதிஸ்ட நாளாகக் கருதி உலகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.
இதற்கிடையில்
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நேற்று (திங்கட்கிழமை) வல்வை பொது விளையாட்டரங்கத்தில் (Futsal - 5 Set foot ball ground) நடைபெற்றது.
வல்வை அ.மி.த.க பாடசாலையின் பரிசளிப்பு வைபவம் இன்று பாடசாலையின் அதிபர் திரு.பூ.சத்திவேல் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்த பரிசளிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி. இரஞ்சிதம் குட்டித்தம்பி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி, வடமராட்சி வலயம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (VEDA) கார்த்திகை மாதத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை இத்துடன் இணைக்கபட்டுள்ளது. வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் வல்வையின் நலன் விரும்பிகளின் உதவியுடன், ஒரு செயற்குழுவின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிகை இளைஞர் விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.