Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிதம்பராக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.தி.சுபாகரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த), க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (Information and Communication Technology) பாடத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியில் 3 வது கலை இலக்கியப் பெருவிழா நடைபெற்றது. இவ் விழாவினைச் சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறையின் நாடகக் கலைஞர் திரு முத்துச்சாமி அவர்களும், பிரதம விருந்தினராக திரு சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டனர்.
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டுவரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில்ஆரம்பமாகியது. வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, பிரதம விருந்தினர்கள் மேளதாள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வல்வையில் செயற்பட்டுவரும், வல்வை ஒன்றியம் தம்மால் முன்னெடுக்கபட்டுவரும் 'பூரணம்' முதியோர் கொடுப்பனவுத் திட்டம், மற்றும் சில திட்டங்களை விளக்கி இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட அறிவித்தலையும், மற்றும் November மாத ஒன்று கூடலையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.
கடந்த சில மாதங்களாக CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வந்த வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் முழுமையாக பூர்த்தியடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தியடைந்துள்ள சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடத்தினை கீழே உள்ள படங்களில் காணலாம்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள சாய் நிலையத்தின் நான்காவது ஆண்டு விழா நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. நேற்றைய தினம் காலை சுமார் 8.30 மணியளவில் ஆரம்பித்து நண்பகல் வரை நீடித்த இந்நிகழ்வில் சில அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட (வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில்) கரப்பந்தாட்ட தொடர் இன்று வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதையொட்டி, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பொதுவான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாதிரை உற்சவத்தின் போது நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் இடம்பெற்றது. இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒருசில சிவன் கோவில்களில் மட்டுமே.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவிருந்த வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இப் பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம், வரும் 10.02.2013 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
வடமராட்சி வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கல்வி நிலையத்தில் க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக Microsoft Office 2007 , Desk Top Publishing (Photoshop, Pagemaker, Coral Draw) மற்றும் ஆங்கிலப் பாட நெறிகள் மூன்று மாதங்கள் நடைபெறவுள்ளன. பங்குபற்ற விரும்பும் மாணவர்கள்.
கடந்த சில நாட்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்றைய தினம் தேராவில் (Theravil) இடத்திலுள்ள மூங்கிலாறு மற்றும் மஞ்சள் பாலம் என்னும் இரு ஆறுகளும் பாதையை மூடி ஓடியமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி தடைப்பட்டிருந்தது. இவ்வீதி நேற்று வழமைக்குத் திரும்பியதனைக் காணக்கூடியதாக இருந்தது.
யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்திலும், வடகிழக்கு, வடமேற்கு கரையோர பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிமுதல் நடைபெற்றது. சம்பிரதாயபூர்வ மௌன அஞ்சலி, மங்கள விளக்கு ஏற்றுதல் மற்றும் கல்லூரிகீதம் ஆகியவற்றுடன் ஆரம்பித்த இந்நிகழ்வு, கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. S. திருவாகரன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இன்று காலை பூப்பந்தாட்டஅறிவுரை, ஆலோசனை, பயிற்சிவகுப்பு என்பன பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களால் நடாத்தப்பட்டன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நத்தார் மரம் ஒன்று 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இலங்கையில் இம்முறை அமைக்கப்பட்ட மிக உயரமான நத்தார் மரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை தேவாலாயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு பங்குதந்தை அவர்களால் திருப்பலி நடாத்தப்பட்டு, இயேசு பாலன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது. இயேசு பாலன் பிறப்பை தொடர்ந்து தேவாலாயத்தின் மணி ஒலிக்கப்பட்டு வெடி கொழுத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை சேர்ந்த உலகுடைய பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் வசிக்கும் (வல்வெட்டித்துறை தேவாலாயத்திற்கு அருகில்) இளைஞர் ஒருவரினால் இந்த பட்டம் ஏற்றப்பட்டது.
க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானப் பாட வினாத்தாள், பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியது உண்மை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 19 வினாக்களுக்கும், பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்வை இந்து ஆலயங்களிலும், மார்கழி மாதத்தில் நடைபெற்றுவரும் திருவெம்பாவையும், அதிகாலையில் 02.00 மணிக்கு சங்கு ஊதி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டில் பல பிரதேசங்களில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.