Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ் - கொழும்பு செல்லும் குளிரூட்டப்பட்ட தனியார் சொகுசு பேரூந்து நேற்று அதிகாலை (சனிக்கிழமை ) ஆனையிறவில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டது. இவ் விபத்திற்கு ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என சொல்லப்படுகின்றது.
கடந்த மாதம் வல்வை மாணவ, மாணவியர்க்கு கட்டுரை, பண்ணிசை, பேச்சு ஆகியவற்றில் போட்டிகள் வல்வை முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலையினால் நடாத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான, பரிசுகள் இன்று (சனிக்கிழமை) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நீச்சல் வீரர் நவரத்தினசாமி அவர்களுக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தொண்டைமானாறைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்னசாமி (நீச்சல் வீரன் நவரத்னசாமி) அவர்கள் 1954 ஆம் ஆண்டிலே பாக்கு நீரிணையை 28 மணி நேரத்தில் ஒருவழி கடந்து சாதனை படைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வை மக்களில் அன்று காணப்பட்ட சக்தியின் அளவு (energy level) குறைந்து காணப்படுகிறது. அமைதியாக இருக்கும் ஒரு குளம் போல இருக்கிறது. ஒரு ஆற்றின் சக்தி இங்கே காணப்படவில்லை. ஆனாலும் சிறுசிறு குழுக்களாகச் செயலாற்றும்போது சக்தி வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊர் முழுவதும் ஒன்றுபட்டு சக்தியை வெளிப்படுத்துவதை காணமுடியவில்லை.
சிதம்பராக் கல்லூரி நலன் புரிவோர் வலயமைப்பினர், வல்வை சிதம்பராக் கல்லூரியில் நடந்தேறி வரும் ஆய்வு கூடம் சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை பின்வருமாறு. "பௌதிகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூட வேலைகள் நிறைவு பெற்றதையும், பௌதீக கற்கை நெறி உபகரணங்கள் ஏற்கனவே வந்தடைந்ததையும் அறிந்திருப்பீர்கள்.
யா / வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (வியாழக்கிழமை ) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விடுமுறை காலம் நாளையிலிருந்து ஆரம்பித்து (07/12/2012) மீண்டும் அடுத்த வருடம் (01/ 01/2013) இல் முடிவடைகின்றது. 02/01/2013 இல் (புதன்கிழமை) மறுபடியும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அரியாலையில் A9 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உதைபந்தாட்ட விளையாட்டரங்கு, இந்த மாதக் கடைசியில் FIFA வின் (Fedaration International of Football Association), தலைவர் 'Sepp Blatter' அவர்களால் திறக்கப்படவுள்ளது. சுமார் USD 400,000 (5 கோடி இலங்கை நாணயம்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது இவ் விளையாட்டரங்கு.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை) வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சாய் நிலையத்தின் மூன்றாவது ஆண்டு விழா நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. காலை 8.30 தொடங்கி நண்பகல் வரை நீடித்த இந்த நிகழ்வில் சில அரச அதிகாரிகள் உட்பட, நிலைய அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். நிகழ்வில் பஜனை மற்றும் கலை நிகழ்வுகள் நடை பெற்றிருந்தது.
வல்வை பொதுவிளையாட்டு மைதானத்தில் (Futsal ground, i.e 5 a-side football) நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி கலட்டி விளையாட்டுகழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுகழகம் 11 : 7 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டுள்ள 'War Museum' மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் அப் பிரதேசங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தங்குமிடம் எனக் கருதப்படும் பாதுகாப்பான மறைவிடத்தைப் பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதிக்கபட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுகழகம் மோதியது.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரில் இன்று இரு போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக மைதானத்தில் நடைபெற்றன.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (28/11/12) வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை சிவன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் 'சொக்கப்பானை'எரித்தல்,மற்றும் சுவாமி வீதி வலம் வருதலையும் படங்களில் காணலாம்.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை அம்மன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற 'சொக்கப்பானை' எரித்தல் நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
இப்புதிய நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது. இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி திரு.R.பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி ஆகும்.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய நாளை (கார்த்திகை 27) இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயங்களில் 'சொக்கப்பானை' எரித்தும், மற்றும் வீடுகளில் நெய்ச்சுட்டிகளிலிலும், வாழைத் தடல்களில் தீபம் ஏற்றியும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும் யாழ் தீபகற்பத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும், வல்வெட்டித்துறை உட்பட, இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. தொடர் மழை காரணமாக வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த இறுதியாட்டம் 20 பந்து பரிமாற்றத்தினை (20 Overs) கொண்டது. வழமைக்கு சற்று மாறாக இந்த பந்துபரிமாற்றம், இறுதியாட்டத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த ஆட்டம் முடிவடைந்த பின் பெண்களுக்கான சிநேகபூர்வ 5 பந்துபரிமாற்றத்தை (5 Overs) கொண்ட மென்பந்தாட்டபோட்டி நடைபெற்றது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது.
நடைபெற்ற கந்தசஷ்டியின் 6 ஆம் நாள் வல்வை சிவன் கோவிலிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மற்றும் தேவர்களின் தூதரான ஹென்துருவர் ஆகியோர் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
இந் நிகழ்வின் மேலதிக படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இன்று இராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளதாக இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கார்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை The Free Press Journal எனும் ஆங்கிலப் பத்திரிகையில் ஆரம்பித்த திரு.பால் தாக்ரே, 1960 களில் 'மார்மிக்' எனும் தனது சொந்த வாராந்த இதழை ஆரம்பித்து பின்னர் 'சாம்னா' எனும் தினசரிப்பத்திரிகையை நடாத்தி வந்தார்.
இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
வல்வெட்டித்துறை மதவடிஉதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தின் வேலைப்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.