Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தினால் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டியானது, உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் 14 / 01 / 2013 (திங்கட்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.
யாழ் கோட்டை தற்போது பார்வைக்கு அனுமதிகப்பட்டிருப்பதுடன் 'தொல்பொருள் சொத்தாகவும்' (Archaeological heritage' இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
செல்வசந்நிதி கோயிலில் கடந்த நான்கு நாட்காளாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டி வழிபாடுகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாளான நாளை முருகன் சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்கள் அருள் பாலிப்பார். இங்கு முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
வல்வை வேம்படி உடையாமாணலில் இயங்கி வரும் கல்விக் கூடத்தில் இலவச 'கணித வகுப்புப் பயிற்சிப்பட்டறை' (Maths Workshop) இன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புப் பயிற்சிப்பட்டறை மாலை நேரம் வரை நடைபெறவுள்ளது.
வடமாரட்சியின் நன்னீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படும் நீர்த் தாங்கிகளில் ஒன்று தொண்டமானாற்றில் செல்வசந்நிதி கோயிலுக்கு அருகாமையில், ஆற்றங்கரைக்கு எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
வல்வையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆரம்ப கட்டமாக நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
வல்வை வேம்படி உடையாமணலில் இயங்கிவரும் கல்விக் கூடத்தில் கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை (Maths workshop) ஒன்று நாளை காலை (18/11/12) 08.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இக்கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறையில் எந்தவொரு வல்வை மாணவரும் பங்குபெறமுடியும் என அறிவிக்கபட்டுள்ளது.
பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்த வல்வையைச் சேர்ந்த திரு.வி.ஸ்.குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு) வல்வையில் சிலை அமைப்பதற்கான ஆரம்ப முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகின்றது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களுக்கு , வடமராட்சி வலய கல்விக் கோட்டத்தினால் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய அதிபராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக துவாளி உடுப்பிட்டியைச் சேர்ந்த செல்வி இராஜலஷ்மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம் - 2 ), வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனத்தினைத் தொடர்ந்து இன்று பதவி ஏற்றுள்ளார்.
அனுஷ்டிக்கபட்டுக் கொண்டிருக்கும் கந்த சஷ்டியின் இறுதி நிகழ்வாக ஆலயங்களில் வருகின்ற 19 ஆம் திகதி சூரன்போர் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வல்வை சிவன் கோவிலில் 'சக்கரவானப் பட்சி' வெள்ளோட்டம் நேற்று சிறந்த முறையில் நடாத்தப்பட்டது. 'சக்கரவானப் பட்சி' நிகழ்வானது இலங்கையிலே வல்வை சிவன் கோவிலில் மட்டும் மேற்கொள்ளப்படுவது என்பது இங்கு குறிபிடத்தக்கது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அதிபர் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும், புதிய அதிபர் திருமதி.சுப்ரமணியம் எனவும் தெரியவருகிறது.
வல்வை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் முக்கிய செய்திகளை வாசகர்களுக்கு விரைவாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் எமது இணைய தளம் Facebook இல் இணைந்துள்ளது. எமது இணையதளத்தின் Facebook ID 'வல்வை இணையம்' - Valvai Inaiyam ஆகும். கடந்த இரு வாரங்களில் எம்முடன் Facebook இல் இணைந்த 285 வாசகர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பருவக் காற்றின் (சோளகக் காற்று) மாற்றத்தினைத் தொடர்ந்து, வழமை போல் வல்வையில் பட்டம் விடுதல் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பட்டங்கள் பொதுவாக எல்லா இடங்களில் விடப்பட்டாலும், மிகுந்த கலை நுணுக்கங்களுடன் அதிக பொருட்ச் செலவுகளுடன் பட்டங்கள் விடுதல் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித் துறை பகுதிகளிலே அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது.
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) கடந்த 29 ஆம் திகதியிலுருந்து கொற்றங் கல்லடி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் புதிய இடத்தில் இயங்குவதைப் படங்களில் காணலாம். வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் வல்வையின் நலன் விரும்பிகளின் உதவியுடன், ஒரு செயற்குழுவின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
முருகன் கோயிகளில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14/11/2012) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறும்.
இதில் வல்வை , நெடியகாடு, விண்மீன் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றிய இரண்டு போட்டிகள் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான ரசிகர்கள் இவ்விரு போட்டிகளையும் கண்டுகளித்து, வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
நாளை நடை பெறவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யாழ் நகரில் இன்று தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. வல்வைச் சந்தியிலும் இன்று வழமைக்கு மாறாக சன நடமாட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது.
இதுவரை காலமும் நெடியகாடு தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (VEDA) தனியார் வகுப்புக்கள் கடந்த இரு வாரங்களிலிருந்து, புதிய இடமான கொட்டங் கல்லடி, வேவில் ஒழுங்கையிலுள்ள ஒரு தனியார் வீடொன்றில் இயங்கி வருகின்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்புவிழாவில், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
சற்று நேரத்திற்கு முன்னர், வல்வை மக்களால் கௌரவிக்கப்படும்முகமாக திரு.R .S .சிவசுப்ரமணியம் (S.L.A.S, ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்) மற்றும் திரு.வேலும் மயிலும் (S.L.A.S, ஓய்வு பெற்ற பிரதேச செயலர்) ஆகியோர், ஊர்வலமாக 'Band ' வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டார்கள்.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அரச உயர் பதவிகளை வகித்த காலத்திலும் அதன் பின்னரும் பொது மக்களுக்கு குறிப்பாக வல்வை மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வல்வை பெருமக்கள் இருவர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
பொலிகை ஒற்றுமை வி . கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் 12 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட சுற்று தொடரில், பொலிகை ஒற்றுமை விளையாட்டு கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற அரை இறுதியாட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து உபயகதிர்காமம் வி.கழகம் மோதியது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வல்வை சிதம்பரக்கல்லூரி மைதானத்தில் வல்வை ஆதிசத்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட சுற்றுதொடரில் இன்று மயிலங்காடு ஞானமுகன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு கழகம் மோதியது.
தொழில் நுட்பவியல் கல்லூரிகளில்/ தொழில் நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக தகமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2010/2011 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் 11/11/2012 அன்று கல்லூரியின் கலையரங்க வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் திருக்குறள், கொன்றைவேந்தன் மனப்பாடம் செய்யும் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஆதிசத்தி வி. கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இளவாலை யங்கென்றிஷ் வி. கழகத்தை எதிர்த்து உரும்பிராய் சென்மைக்கல் வி. கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இளவாலை யங்கென்றிஷ் வி. கழகம் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.
யாழ்ப்பாண குடா நாட்டின் அடித்தளம் சுண்ணாம்புக் கற்பாறைகளைக் கொண்டது. இந்தியத் தமிழகத்தின் நீட்ச்சியாக இருந்த நிலப்பரப்பின் தாழ்வான பகுதியைக் கடல் கபளீகரம் செய்தமையாலேயே இலங்கை தனித் தீவாக உருவானது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.