இன்றைய நாளில் - ஒப்பரேசன் ரிவிரச மற்றும் யாழின் மாபெரும் இடப்பெயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
சரியாக 29 வருடங்கள் முன்பு இதே நாளான 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு அக்டோபர் மாதம் பதினேழாம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 'Operation Riviresa' (Operation Sunrays, ஒப்பரேசன் ரிவிரச, சூரியக்கதிர்) என்னும் இராணுவ நடவடிக்கையை அடுத்து இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த இடப்பெயர்வு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
ஒப்பரேசன் ரிவிரச மூலம் யாழ் வலிகாமம் முற்று முழுதாக இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், அன்றைய நேரத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய, தனியான, வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையாக அது தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 5 லட்சம் வரையான பொதுமக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வலிகாமத்தையும் தென்மரட்சியையும் இணைக்கும் நாவற்குழி பாலத்தைக் கடந்து சென்றதுடன் இவர்களில் பலர் யாழ் நீரேரியைக் படகுகளில் கடந்து வன்னி பெரு நிலப்பரப்புக்கும் சென்றதாக அன்றைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.