மரண அறிவித்தல் - வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஓய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஓய்வுநிலை அதிபர்)
பிறப்பு: 12/05/1934 இறப்பு: 01/03/2024
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஓய்வுநிலை அதிபர்) இன்று அதிகாலை 01/03/2024 காலமாகிவிட்டார்.
இவர் காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மற்றும் பொன்னாம்பிகையின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் மற்றும் லெட்சுமியம்மாவின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார், அமரர் ஏகம்பதாசன், அமரர் இராமநாததாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அமரர் மகேசதாசன் மற்றும் அன்னபூரணி, அமரர் நடேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமரர் துரைசிங்கம், இராஜலிங்கம், அமரர் செல்லதுரை, அமரர் இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராஜலஷ்மி மற்றும் அமரர் சற்குணபூசணி, நாகசுந்தரேஸ்வரி, அமரர் தையல்நாயகி, மீனாட்சிசுந்தரம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னார், அமரர் ஜெகதீசன், அமரர் ஜெயந்தி மற்றும் ஜெகரூபன், வசந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபர்ணா, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரன், கேசவன், பிரபாகர், கோபிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.