ஐங்கரநேசனின் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்திற்கு அங்கீகாரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2026 (சனிக்கிழமை)
இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் முன்னாள் வடமாகாண அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் தலைமையிலான கட்சியும் இணைந்துள்ளது.
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகச் செயற்படுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொ. ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (Tamil National Green Organisation) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் குறித்த கட்சிகள் தமது கட்சிப் பெயர் மற்றும் ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளன.
இதன்படி, இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(தகவல்: இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.