ஆண்டு இரண்டினில் அடிபதித்திடும் இணையதளம் Valvettithurai.org - வல்வைக்குரல்கள் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)
(Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
ஆண்டு இரண்டினில் அடிபதித்திடும் இணையதளம் Valvettithurai.org
"அகவையோ சிறிது - ஆற்றிடும் செயல்களோ பெரிது" வல்வையென்ற முகம் காட்டி - இதற்கான புகழ்சாற்றி - எம்மவர்க்கும் எம்மோடிணைந்த ஏனையோர்க்கும் அன்றாடம் - அவ்வப்போது சுடச்சுட வாய்ப் பலப்பலவாய் தகவல் தந்திடும் இணையதளம் Valvettithurai.org.
ஊர் அறிய - உலக அறிய - உவப்பான தகவல்களை எமக்களிக்கும் இணையத்தளம் Valvettithurai.org. எம்மூரின் ஆலயங்கள், இவற்றின் பக்திசார் நிகழ்வுகள், ஊரோடிணைந்த - ஒன்றிக் கலந்த சமய நிகழ்வுகள், விசேட தினங்கள், பெருநாள்கள், பண்டிகைகள், எம்மூரின் கல்வி நிலையங்கள், கல்விசார் செயற்பாடுகள், விளையாட்டின் தரம் வளர்க்கும் விளையாட்டுக் கழகங்கள் - இவற்றின் நிகழ்வுகள், புரிந்து வரும் சாதனைகள், கலை கலாச்சாரக் கோலங்கள், இலக்கிய விழுமங்கள் - என்ற தன்மமையில் இவற்றையெலாம் யாவரும் அறிந்திட, இனிமை தவழ - புதுமை பொலிய - திறமை துலங்க, இதமுடன் அளித்திடும் இணையதளம் Valvettithurai.org.
வரலாற்றில் புகழ் பூத்த எம்மவரின் வியப்பு மிகு சாதனைகள் அறிவுக்கு தீனியிடும் ஆன்றோரின் படைப்புகள் உன்னத செயற்பாடுகள், தேவைகேற்ப பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், அஞ்சலிகளையும் நம்மவரின் நலன் கருதி - நாட்டின் தேவையுணர்ந்து நாளாந்தம் நமக்களித்திடும் சாதனம் Valvettithurai.org.
ஆழப்புகுந்து - அகலப்பாய்ந்து - அக்கம் பக்கம் உற்றுப் பார்த்து தரமான தகவல்களை தாமே எடுத்து, அழகாய்த்தொகுத்து எமக்கெனப் படைத்திடும் இணையதளமாம் Valvettithurai.org.
இன்றுபோல் என்றும் எமக்காம் தகவல்களை தப்பாமல் - தவறாமல் தந்திட வேண்டி இயற்கையை பணிந்து சிரம் தாழ்த்தி ஏற்றிடுவோம் போற்றிடுவோம் என்றென்றும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.