Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் வசதியின்மைகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசலகூடத்தைக் கழுவும் அவலம்

பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மிகவும் குறிப்பிடக்கூடிய வசதியின்மைகள் தற்பொழுது நிலவிவருகின்றன.
 
பாடசாலைக்கட்டடம், ஆட்பற்றாக்குறை, சில பொருட்தேவைகள், குறைவான மாணவர் எண்ணிக்கை எனக்காணப்படும் பிரச்சனைகளில், பாடசாலைக் கட்டடத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தவேலைகளை முன்னெடுக்கு முடியாதுள்ளமை, வரும் மழைகாலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
 
இதை விட காவலாளி,துப்பரவுத் தொழிலாளி என யாரும் இல்லாததால் அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசல கூடத்தை துப்பரவு செய்யும் அவலமும் நீடிக்கின்றது.
 
இவற்றை வெளிகொணரும் முகமாகவும் அதிபர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்காகவும்              றோ .க.த.க  பாடசாலை அதிபர் திருமதி.மங்களேஸ்வரி அவர்களை பாடசாலையிலேயே நேரில் சந்தித்தோம்.
 
அதிபரிடமிருந்து திரட்டிய தகவல்களையும், நாம்எடுத்திருந்த சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் கீழே தருகின்றோம்.
 
றோ.க.த.க பாடசாலைக் கட்டடம் 
இது சுனாமியின் பின்னர் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. வெளிப் பார்வைக்கு மிகவும் அழகாகவும் முழுமையாகவும் தென்படுகின்றது.
 
கட்டடத்தில் உள்ள தற்போதைய குறைபாடுகள் 
2 மாடிகளைக் கொண்டுள்ள இக்கட்டத்தின் மேல் மாடியில் உள்ள அதன் பக்கங்கள் அதிகளவு இடைவெளிகளைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை காலத்தில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகளவு மழை நீர் உட்புகுகின்றது. அத்துடன் புறா, காகம் போன்ற  பறவைகளினால் வகுப்பறைகள் எச்சப்படுத்தப்பட்டுவருகின்றன.
 
மேலும் மேல் மாடிக்கான வழியானது திறந்தவாறே அமைக்கப்பட்டுள்ளதாலும், கட்டடத்தின் விளிம்புச் சுவர்களின் உயரம் சுமார் 3அடியே உள்ளதாலும் - கட்டம் ஆனது சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது.
 
இதனால் கீழ் மாடிக் கட்டடத்துக்குரிய மின்விசிறி போன்ற உபகரணங்கள் பொருத்தப்படாமல் பாடசாலையின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளன.
 
பொது மண்டபத்தின் குறைபாடுகள் 
மேலும் கீழே உள்ள பொது மண்டபமானது இரு பக்கங்களில் மூடப்படக் கூடிய வகையில் இல்லாததால், மண்டபத்திலும் மழை நீரின் தேக்கம் அதிகம் எனக் கூறப்படுகின்றது 
 
அதிபரின் முயற்சிகளும், கல்வி வலையத்தின் வரையறைகளும் (Restrictions and limitations)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிபரினால் வடமாரட்சி கல்வி வலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாடசாலையில் 50 மாணவர்களே கல்வி கற்று வருகின்றமையினால் - குறைந்தளவு மாணவர்கள் என்ற விடயம் காரணமாக - கல்வி வலயத்தினால் 'நிதி ஒதுக்குதல்' அல்லது 'மேற்கொண்டு உடனடியாக பாடசாலைக்கு உதவுதல்' என்பனவற்றில் வரையறைகள் மற்றும் நடைமுறைச்சிக்கல்கள் உள்ளதாகத் தெரியவருகின்றது.
 
இதனால் அதிபரினால் அண்மையில் 'கல்வி அபிவிருத்திக் சங்கக் கூட்டமானது' (SDS Meeting) கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான  'நலன் விரும்பிகளிடம் உதவிகோருதல்' எனும் தீர்மானம் பற்றி அதிபரினால், வலயக் கல்வி பணிப்பாளரினால் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
 
அதிபரின் தேவை  
மேற்குறிப்பிட்டுள்ள கட்டடப் பிரச்சனைகளால் மழைக்காலங்களில், இங்கு கல்வி பயலும் 1 தொடக்கம் 5 வரையான சிறார்கள் நனைய வேண்டிய சூழ்நிலை உள்ளதைக்  கருத்திற்கொண்டு உடனடியாக மேல்மாடித் திருத்த வேலைகளுக்குத் தேவையான சுமார் 5 லட்சம் ரூபாவினை நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
.
மேலும் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் உள்ள பொது மண்டபமானது அறிக்கைப் படுத்தப்பட்டுள்ளது போல், இப்பாடசாலை மண்டபத்தையும் அறிக்கைப் டுத்தத் தேவையான சுமார் 5 லட்சத்தையும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
 
அதிபர் ஆசிரியரே மலசலகூடத்தைக் கழுவும் அவலம்.
இதை நாம் பார்த்தபொழுது நம்புவதற்கு மிகவும் கடினமாகவிருந்தது. அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பெண்கள் ஆவர். ஒரு காவலாளியோ அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளியோ இல்லாத காரணத்தால் அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசலகூடம் உட்பட்ட பல துப்பரவுத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். 
 
யாரை குறை சொல்வது, குறைந்தளவு மாணவர்கள் என்பதால் கல்வி வலயத்திலிருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல், 'பழைய மாணவர் சங்க நிதி' என்று ஒன்றில்லாத நிலை, மறுபக்கம் மழையால் திண்டாடும் மாணவர்களும் ஆசிரியர்களும், துப்பரவுத் தொழிலாளி இல்லாதபடியால், பாடசாலை முடிந்தவுடன் தாமே மலசலகூடத்தை துப்பரவு செய்தல் என திண்டாடுகின்றார் அதிபர்
 
எல்லோரும் வரலாம் - புறா எச்சங்கள் - தேவை ஒரு துப்பரவுத் தொழிலாளி 
 
 
வலையிலினால் தற்காலிகத் தடுப்பு - தேவை நிரந்தரக் கதவு 
 
 
 
துப்பரவுப் பணியில் மாணவர்களும் ஆசிரியர்களும் (ஆசிரியர் படம் இணைக்கப்படவில்லை)
 
அறிக்கையற்ற மேல் தட்டு - உடைந்த கண்ணாடி யன்னல்கள்  
 
 
மேல் தட்டு, 1 ஆம் மாடி - அதிகளவு திறந்த வெளி - மாரி காலங்களில் பாவிக்கவே முடியாத நிலை 
(இதுவே மோசமான பிரச்சனையாக அதிபரால் குறிப்பிடப்படுகின்றது)
 
 
இருபக்கம் திறந்த வெளியாகவுள்ள மண்டபம் - மழை காலங்களில் சிறந்த நீர்த்தேக்கி - தேவை சிவகுருவில் அமைக்கப்பட்டுள்ளது போல் திறந்து மூடக் கூடிய யன்னல்கள் 
 
 
மின்குமிழ்கள் அற்றுக் காணப்படும் மண்டபம் 
 
 
தர்மசங்கடத்தில் அதிபர் 
 
மேலதிக விபரங்களுக்கு அதிபரைத் தொடர்பு கொள்ள:-
திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம் 
தொலைபேசி இல - 00 94 77 41 38 637 
(பாடசாலைக்கென பிரத்தியேக தொலைபேசி எண்கள் எதுவுமில்லை)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
P. Suggi (UK) Posted Date: October 15, 2013 at 19:06 
Dear Principal,

I just read this post. It made me upset that the children have to suffer due to all of the reasons and cannot study properly. Therefore towards this school's improvement I would like to contribute £100.

I hope that everyone around the world recognizes your hard work and also contribute something to help.

P.S.
Thanks to www.valvettithurai.org for bringing this to our attention.

Suggi (London)
Wishing you the very best


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2033>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai