வல்வெட்டித்துறை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூல் கண்காட்சி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2013 (வியாழக்கிழமை)
நாட்டின் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, வல்வெட்டித்துறை நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை பொது நூலகத்தில் நூல் கண்காட்சி ஒன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும். இக் கண்காட்சியை வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K சிவாஜிலிங்கம் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்.
பல்வேறு நூல்களின் பிரசன்னம் மற்றும் அனைவரினதும் வாசிப்புத் திறன் எனும் கருப்பொருளுடன் இன்றும் நாளையும் இந் நூல் கண்காட்சி காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெறுகின்றது.
இந் நூல் கண்காட்சியில் வாசகர்களுக்கு இலகுபடுத்தும் வகையில் சகல நூல்களும் அவற்றுக்குரிய தலைப்புக்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது தகவல் கல்வி, வரலாறு, இலக்கணம், இலக்கியம், இதிகாசம், தொழில்நுட்பம், அறிவியல், நூலகவியல், சூழலியல், ஊடகத்துறை, சமையல் மற்றும் அழகுக்கலை, சோதிடம் மற்றும் வானியல், (சில குறிப்பிட்ட) வல்வெட்டித்துறை எழுத்தாளர்களின் நூல்கள், வல்வை வரலாற்று நூல்கள், சுயசரிதை நூல்கள்,கலைக்களஞ்சியங்கள், சிறுகதை, நாவல், கவிதை மற்றும் பாடசாலைகளின் ஆண்டு மலர்கள், ஆண்டறிக்கைகள் போன்ற தலைப்புக்களில் நூல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சி சுமார் 6000ற்கு அதிகமான, வல்வை ஆவணகாப்பகத்தின் உள்ள புத்தகங்கள் உட்பட வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வையின் மையப் பகுதியில் அமைந்துள்ள, வல்வை நகரசபையால் சிறப்பாக, பல ஆண்டுகள் சேவையில் உள்ள பொது நூலக நூலகர் (Librarian) ஒருவரின் கீழ் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில், சுமார் 20 பேர் வரையானோரே தினமும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதும், அத்துடன் அனேகமாக அதே நபர்களே தினமும் சமுகமளிக்கின்றனர் என்பதும், தற்போதைய 'Tablets', 'iPhone' மற்றும் 'Facebook' உலகில் ஒதுக்கிவிடமுடியாத கவலைதரும் விடயமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.