கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் காலமான வல்வெட்டித்துறையின் முன்னணித் தொழில் அதிபர்களில் ஒருவரான, அன்னை முத்துமாரியம்மன் ரவல்ஸ் உரிமையாளரான திருஆறுமுகசாமி பாலசுப்ரமணியம் (ராசா) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
திரு.ராசா அவர்களின் பூதவுடல் நேற்று கொழும்பிலிருந்து வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இன்று அவரின் ஊரிக்காட்டில் அமைந்துள்ள வீட்டில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் பாண்ட் வாத்திய அணி வகுப்புடனும், அவரின் 3 அன்னைமுத்துமாரி சொகுசுப் பேருந்துகள் அணிவகுக்க, பூதவுடலானது வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டித்துறையை அண்டியுள்ள முக்கிய பிரதேசங்களான வல்வெட்டி, உடுப்பிட்டி சந்தி , கெருடாவில் , தொண்டைமானாறு போன்ற முக்கிய வீதியூடாக சென்று, இறுதியில் மயிலியதனை - ஊரிக்காட்டில் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மிகவும் சமய பக்தி கொண்ட, திருமணமாகாத திரு.ராசா அவர்கள், தற்பொழுது வல்வையின் மிக முக்கிய முன்னணிப் பிரமுகராகக் கருதப்படுவதுடன், கொழும்பில் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கையும் பெற்றவராகக் கருதப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.