வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் மாபெரும் கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 03.30 மணியளவில்ஆரம்பமாகியது. நிகழ்வில் முதலில் பிரதம விருந்தினர்கள் வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, மேளதாள வாத்தியம், சிறார்களின் நடன, காவடி ஆட்டங்களுடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் ர .மகிந்தன் அவர்கள் தலைமையில் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி N. சண்முகலிங்கன் ( துணைவேந்தர், சமூகவியற் பேராசிரியர், சமூகவியற்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.பா .மீனாட்சி சுந்தரம் (சமாதான நீதவான், வல்வை ஆவணக் காப்பக காப்பாளர் ) அவர்களும் , திரு.சி.சிவபாலசிங்கம் ( முன்னாள் கிராம சேவையாளர் ஜ/393, பொலிகண்டி மேற்கு ) அவர்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் மங்கள விளக்கேற்றும் நிகழ்வினைத்தொடர்ந்து அக வணக்கம், இறைவணக்கம், தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் ஆரம்பமாகியது.
வரவேற்புரையைத் தொடர்ந்து சிவஸ்ரீ சோ.தண்டபாணிக்க தேசிகர் (பிரதம குரு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் ) அவர்கள், அருட்திரு கா. நிரூபன் நிஷாந்த் (புனித செபஸ்தியார் ஆலய பங்குத் தந்தை - வல்வெட்டித்துறை) ஆகியோரால் ஆசியுரை நிகழ்த்தப்பட்டது.
தலைவர் உரையினைத்தொடர்ந்து நெய்தல் மலர் 4 வது இதழ் வெளியிடப்பட்டது. கலை கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .
அதனைத்தொடர்ந்து திரு பொ. வல்லிபுரம் அவர்களுக்கு "வல்வை கலைச்சிகரம் -2014 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது . பிரதம விருந்தினர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வுகளை தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இது சம்பந்தமான மேலதிக செய்திகள் , படங்கள் மற்றும் விபரங்கள் விரைவில் உங்கள் பார்வைக்கு உங்கள் www.valvettithurai.org இணையத்தில் !!!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.