வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கமும் (VaiSWA) வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமும் (VEDA) இணைந்து இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இன்று காலை 09.30 மணியளவில் வல்வை அ . மி .த .க பாடசாலையில் (A .MSchool) நடைபெற்றது.
ஓய்வு பெற்ற வல்வை மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி G.நகுலாம்பிகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் திரு.இரா.அகிலன் (உதவிப்பணிப்பாளர், Vocational Training Authority) அவர்களும், அருட் சகோதரி ஜெரல்டின் (Principal Holy cross School of Health Science) அவர்களும், செல்வன்.S ஷாரூபன் (Director –V4 Educational Consultancy and V2 Travels & Tours PVT LTD) அவர்களும், திரு.ஜெய்க்கர் (Skill Development & officer College of Fisheries & Nautical Engineering) அவர்களும் கலந்து கொண்டு தொழில்சார் கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.
இக்கருத்தரங்கில் முக்கிய விடயமாக யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் பற்றி விசேட கவனம் எடுக்கப்பட்டிருந்தது. இன்றைய கருத்தரங்கில் பல இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.