சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைக்க நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைப்பதற்கு வல்வை மக்களிற்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். குறித்த வேண்டுகோளும், எம்மால் திரட்டப்பட்ட விளக்கங்களும் தேவையான படங்களுடன் கீழே விரிவாகக் இணைக்கப்பட்டுள்ளன.
நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோள்
தற்போதைய பிரசவவிடுதியில் உள்ள குறை
தற்பொழுது பிரசவ விடுதியாகப் பாவிக்கப்படுவது Ward - 3 ஆகவுள்ள, பெண்கள் விடுதியாக உள்ள பார்வதிப்பிள்ளை சிற்றம்பலம் பிரசவவிடுதி ஆகும். பெண் நோயாளர்கள் தங்கும் விடுதியில் பிரசவித்த சிசுக்கள் தங்குவது தொற்று நோய்கள் ஏற்பட பெரிதும் வழி வகுக்கலாம்.
பிரசவவிடுதியாகப் பாவிக்கப்படும் பெண்கள் விடுதி - தொற்றுநோய்கள் அபாயம்
தற்போதைய பிரசவ விடுதியுடன் தொடர்புடைய மேல்விடுதி - தனிமைப்படுத்தப்படாத பிரசவவிடுதி
தற்போதைய பிரசவ அறை (Labour Room)
1947 இல் கட்டப்பெற்ற சாரங்கம்மா பிரசவவிடுதி - தற்பொழுது பெண்கள் விடுதியாக மட்டும் பாவிக்கப்படுகின்றது
சாரங்கம்மா பிரசவவிடுதியை மீண்டும் பிரசவ விடுதியாக மாற்ற முனைவதற்கான காரணங்கள்
* பிரசவித்த தாய்மார்களிற்கென தனிப்பட்ட விடுதி - தொற்றுநோய் அபாயங்களை நீக்கும்
* குறித்த பிரதேச வைத்தியசாலையில் மாதத்திற்கு 15 வரையான பிரசவங்களே இடம்பெறுகின்றன. சாரங்கம்மா பிரசவ விடுதியில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை 16. பார்வதிப்பிள்ளை சிற்றம்பலம் பிரசவவிடுதியில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை 20.
பிரசவ அறை மற்றும் மலசல கூடத்திற்கான தேவை
தற்பொழுது பெண்கள் விடுதியாகவுள்ள சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாக மாற்றும் பொழுது, இதற்கு இதனுடன் கூடிய ஒரு பிரசவ அறை மற்றும் மலசலகூடம் அத்தியாவசியம் ஆகின்றது. காரணம் தற்பொழுது பெண்கள் விடுதியாகப் பாவிக்கப்படும் விடுதியுடன் கூடி அமைந்துள்ள பிரசவவிடுதியின் தூரம் குறிப்பிடக்கூடியளவிற்கு அதிகமானதாகவும், வளைவு மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பாதைகளைக்கொண்டதாகவும் உள்ளன.
இது பிரசவிக்கவுள்ள தாயை கூட்டிச் செல்லும் (பெண்) தாதி யர்களிற்கு நீண்ட கால நோக்கிற்கு உகந்தவை அல்ல.
குறித்த பாதையின் ஒரு பகுதி
குறித்த பாதையின் இன்னொமொரு பகுதி
மேற்குறித்த காரணங்களிற்கமைய சாரங்கம்மா பிரசவ விடுதியுடன் கூடிய பிரசவவிடுதி மற்றும் மலசல கூடம் என்பன அமைப்பது அவசியமாகின்றது.
குறித்த பிரசவவிடுதி மற்றும் மலசல கூடம் ஆகியவற்றை சாரங்கம்மா பிரசவ விடுதியுடன் ஒரு பக்கமாகவுள்ள நிலத்தில் அமைக்க நோயாளர் நலன்புரிச்சங்கம் முயற்சிகின்றனர்.
இதற்குரிய செலவு சுமார் 16 இலட்சங்கள் ஆகும் என சுகாதாரத் திணைக்களத்தின் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் மதிப்பிட்டுள்ளார்.
சாரங்கம்மா பிரசவவிடுதியின் ஒருபக்கத் தோற்றம்
சாரங்கம்மா பிரசவ விடுதியின் உட்பக்கத் தோற்றம்
பிரசவ அறை மற்றும் மலசல கூடம் அமைக்க உத்தேசித்துள்ள சாரங்கம்மா விடுதியுடன் கூடிய பகுதி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.