Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் நிர்வாகசபைக்கூட்டம் நடைபெற்றது

பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2013 (வியாழக்கிழமை)

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் தாய் சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டம், கல்லூரிமண்டபத்தில் 24-03-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.

இதனுடன் சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் ;சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபை கூட்ட அறிக்கை [24-03-2013]

சிதம்பராக்கல்லூரியின் பழையமாணவர் தாய்ச்சங்கத்தின் இரண்டாவது மாதாந்த நிர்வாகசபைக் கூட்டமானது 24-03-2013 மாலை 5 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிறவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு மிகமுக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் முதலாவது மாதாந்த நிர்வாகசபைக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மிக அத்தியாவசியமான செலவுகள் தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்திடம் கேட்டுக்கொண்ட சிலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எமது நிர்வாகசபையினால் தீர்மானம் எடுக்கப்பட்ட ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் Broadband இற்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்தினரிடம் E-mail மற்றும் கடிதம் மூலமாகவும் விடுத்த கோரிக்கைகளுக்கு மூன்று வாரங்களாகியும் எந்தவிதமான பதிலும் E-MAIL மூலமாகவோ கடிதமூலமாகவோ கிடைக்கப்பெறவில்லை என்பதனை செயலாளர் முன்வைத்தார்.

இது தொடர்பாக கொழும்பு பழையமாணவர் சங்கத்திடம் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கேட்ட பொழுது எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார். மேலும் தாய்ச்சங்க நிர்வாகத்தினரை, ஒரு ரவுடித்தனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையினர் என்று அவதூறான முறையிலும், ஜனநாயகமற்ற முறையிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது என செயலாளர் தெரிவித்தார். மிக நீண்டகாலத்திற்கு பின்னர் வல்வெட்டித்துறை சிதம்பரக்கல்லூரியின் பொதுக்கூட்டத்திற்கு மிகப்பெருந்தொகையானோர் சமூகமளித்த நிலையில், அதனூடாக ஜனநாயகமுறையில் தெரிவுசெய்யப்பட்ட தாய்ச்சங்க நிர்வாகத்தினருடன் நேரடியான தொடர்புகளைப்பேணாது இவ்வாறு தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கொழும்பு பழையமாணவர் சங்கம் வல்வை தாய்ச்சங்கத்திற்கு தங்களுடைய இந்நிலைப்பாடு தொடர்பில் சரியான விளக்கத்தினை அளிக்கவேண்டும் எனவும் மற்றும் நிதிநிலவரம் தொடர்பான விபரங்கள் அனுப்பப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது. சிதம்பராக்கல்லூரியின்  அத்தியாவசியமான கோரிக்கை தொடர்பில் வல்வை பழையமாணவர் சங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கு கொழும்பு பழையமாணவர் சங்கம் காட்டிவரும் அசிரத்தை தொடர்பிலும் எழுத்துமூலமான எதுவித பதில்களும் கிடைக்கப்பெறாத நிலையிலும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் Broadband இற்கான செலவினை கொழும்பு பழையமாணவர் சங்கம் அனுப்பி வைக்காத நிலையில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எமது இரண்டாவது நிர்வாக சபைக்கூட்டத்திற்கு முன்னராக பதிலினை அனுப்பிவைக்குமாறு E-mail, மற்றும் கடிதம் மூலமாக கேட்கப்பட்டிருந்த போதிலும் எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த 10-02-2013 ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டு கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும், முன்னெடுக்கவிருக்கும் எமது தாய்ச்சங்கம் கொழும்பு பழையமாணவர் சங்கத்துடன் பலமுறை தொடர்புகளை ஏற்படுத்தியும் எதுவிதபதில்களும் அளிக்கப்படாதது ஜனநாயகமுறைக்கு எதிரானது என உபதலைவர் திரு. சிவாகிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கொழும்பு பழையமாணவர் சங்கம் எமது தாய்ச்சங்கத்துடன் சரியான தொடர்புகளை பேணவேண்டும் எனவும், புலம்பெயர் மக்கள் மற்றும் பழையமாணவர்களால் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் செலவுகளுக்கென கொழும்பு பழையமாணவர் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதி பாடசாலையின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கல்லூரியின் தாய்ச்சங்கத்திற்கு எந்த முரண்பாடுகளும் இன்றி ஜனநாயக முறையில் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.

மேலும் தாய்ச்சங்கம் கல்லூரியின் அத்தியாவசியமான தேவைகள் தொடர்பில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட விடயங்களை முறையாக E-mail, மற்றும் கடிதம் மூலமாக அனுப்பிவைத்தபோது, அது பரீசீலிக்கப்பட வேண்டும் என தொலைபேசியூடாக கருத்துக்கூறப்பட்டதாக செயலாளர் தெரிவித்தார். இதற்கு, பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் எமக்கு தரப்பட்ட கோரிக்கைகளை தாய்ச்சங்கத்தினராகிய நாம் பரிசீலித்தே அனுப்பிவைத்துள்ளோம். அதன் அடிப்படையில் கிளைச்சங்கத்தினராகிய கொழும்பு பழையமாணவர்சங்கம் இதனை பரீசீலிப்பதென்பது நியாயமற்றதெனவும் இதற்காக கோரப்பட்ட நிதியினை செலுத்துவது தொடர்பில் உள்ள இடர்பாட்டினை E-Mail அல்லது கடிதமூலமாக எமக்கு அனுப்பிவைக்கப்படவேண்டுமென சபையால் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் வல்வை பழையமாணவர் சங்கம், கொழும்பு பழைய மாணவர் சங்கத்திடமிருந்து அதற்குரிய ஆமோதிப்புக்கள் பெறப்படாமலேயே பலமில்லியன் ருபாய்கள் செலவழிக்கப்பட்டிருப்பதை சபையினர் சுட்டிக்காட்டி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் கடந்த பத்து வருடங்களாக கொழும்பு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கூட்டப்படாமல் இருப்பது ஜனநாயக முறைக்கு முரணாணது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்து. மற்றும் கல்லூரிச்சமூகத்தால் கேட்கப்படுகின்ற மிக மிக அத்தியாவசியமான செலவுகளுக்கு, கொழும்பு பழையமாணவர் சங்கத்திலிருக்கும் நிலையான வைப்பிலிருந்து வருடாந்தம் பெறப்படும் வட்டி மிகவும் போதுமானது மட்டுமல்ல, அதிகமானது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஆறு வாரங்கள் கடந்த நிலையில் பாடசாலையின் அத்தியாவசிய தேவை தொடர்பில் எம்மால் கோரப்பட்ட எந்த நிதியும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் பணம் கொடுப்பதில் உள்ள சிரமங்களை பொருளாளர் தெளிவுபடுத்தினார்.

இறுதியாக, கொழும்பு பழையமாணவர் சங்கம் தாய்ச்சங்கத்துடன் ஜனநாயக முறையிலான தொடர்புகளை பேணி கல்லூரியின் வளர்ச்சிப்பாதையில் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

எது எவ்வாறு இருப்பினும் பாடசாலையின் கல்விவளர்ச்சி பாதையில் எமது அடுத்த செயற்பாடுகளை மிக விரைவாக செயற்படுத்த வேண்டுமெனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளான  Leader Ship Training Program, Career Guidance Workshop,  போன்ற விடயங்களை எதிர்வரும் மாதங்களில் நடத்துவதெனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இதற்கு செயற்குழு உறுப்பினர் திரு. சு. சிறீஸ்கந்தராசா அவர்கள் கொழும்பு பழையமாணவர் சங்கத்துடனான பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு அதன்பிறகு அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றி கவனிக்கலாம் என்று கூறினார். அதற்கு செயலாளர், கொழும்பு பழையமாணவர் சங்கத்துடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், ஆனால் எமது கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் கல்வித்தரம் என்பவைதான் எமக்கு மிக முக்கியமானது என்றும் ஆகவே இவை தொடர்பான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆக்கபூர்வமாக செயற்படுத்துவதற்கு தேவை ஏற்படும் பட்சத்தில் பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளுக்குரிய நிதியை நாமே திரட்டிக்கொள்வதற்குரிய முயற்சியை எடுக்கவேண்டிவரும்  எனவும் எடுத்துக்கூறினார். மேலும் புலம்பெயர் மக்கள் மற்றும் பழையமாணவர்களால் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் செலவுகளுக்கென கொழும்பு பழையமாணவர்சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதி எம்மால் கோரப்படும்போது வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உரியது என்றும் இதில் எந்த விதத்திலும் தாய்ச்சங்கத்தினருக்கோ, பாடசாலை நிர்வாகத்தினருக்கோ ஜனநாயக முறையற்றவிதத்தில் இடர்பாடுகளை ஏற்படுத்துவது உகந்ததல்ல எனவும் வலியுறுத்தப்பட்டது. இதன்பின்னர் எமது அடுத்த செயற்பாடுகளை திட்டமிட்டபடி விரைவாக எதிர்வரும் மாதங்களில் நடத்துவதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

கோ. சற்குணபாலன்

செயலாளர்

சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்

வல்வெட்டித்துறை

SOURCE LINK - http://www.chithambaracollege.org/


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2023>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10
11
12
131415
16
17
18
19202122
23
24
25
26
27
2829
30
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai