தாழமுக்கம் ‘மகாசென்’ பங்காளதேஷ் கரையைத் தாண்டியது, வல்வையில் காலநிலை வழமைக்குத் திரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ‘மகாசென்’ (Tropical Cyclone), வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று அதிகாலையில் வங்கதேசத்தை கடந்தது, அதன் பின்னர் படிப்படியாகப் பலமிழந்து தொடர்ந்து வடகிழக்குத் திசையில் சுமார் 25 கடல் மைல்கள் வேகத்தில் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராப் பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
இந்தப் புயலினால் பங்களாதேஷ், மயன்மார், மற்றும் இந்தியாவை சேர்ந்த லட்சக்கணகான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க , இப்புயலினால் யாழில் உருவாகியிருந்த அசாதாராண காலநிலை நீங்கப் பெற்று வழமைக்குத் திரும்பியது.
இந்த புயலினால் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால், நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவர் பலியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமானது (Tropical cyclone) மே மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.