நேற்று எமது இணையத்தளத்தில் வெளியாகியிருந்த "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பின், வெளியீடு சம்பந்தப்பட்ட செய்தியை தொடர்ந்து "வல்வையூரான்" பற்றிய சர்ச்சை உருவாகியிருந்தது. "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பை எழுதியிருந்தவர் திரு. பிரேம், இவர் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் - "வல்வையூரான்" எனும் புனைப்பெயரில், கவிதை தொகுப்பை அச்சிட்டிருந்தார்.
இதன் விளைவாக தற்போது "வல்வையூரான்" எனும் புனைப்பெயரில் கவிதை ஆக்கங்களை வெளியிடுபவர், தனது ஆட்சேபனையை எமது (கனடா) இணையத்தளப் பொறுப்பாளாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். ஆனாலும் நாம் எமது வரையறைகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, இவ்விடயம் Dr. மயிலேறும் பெருமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
Dr. மயிலேறும் பெருமான், மற்றும் சில கலைஞர்களின் வேண்டுகோள்களை அடுத்து "கம்பிகளின் மொழி" கவிதாசிரியர் தனது இன்றைய கவிதை தொகுப்பின் வெளியிட்டு நிகழ்வின் போது "வல்வையூரான்" எனும் புனைப்பெயரை தான் இனிமேல் பாவிக்கப்போவதில்லை என்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளார்.
"வல்வையூரான்" எனும் புனைப்பெயரில் சுமார் 40, 50 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் திரு. ஆறுமுகம் தங்கவேலாயுதம் (தேவர்) அவர்கள் கவிதை, கட்டுரை போன்ற ஆக்கங்களை படைத்திருந்தார் என்பதும் பின்னர் இவரின் அனுமதியுடன் கடந்த 1, 2 வருடங்களாக "வல்வையூரான்" எனும் புனைப்பெயரில் கவிதை ஆக்கங்களை இன்னொருவர் கனடாவிலிருந்து வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.