Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
k.S.Thurai (Denmark)
Posted Date: February 16, 2016 at 21:55
துரோணர் படக்குழுவினர்க்கு எனது நன்றிகள்.. பதிலுக்கு பாராட்டுக்கள்..
தற்போது யாழில் இருந்து சில திரைப்படங்கள் வருவதாக விளம்பரங்களில் பார்க்கிறேன்..
புலவர் என்ற படப்பிடிப்பு குழுவினர் பல சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் என்று அவர்களை பாராட்டி, பல ஆலோசனைகளும் அவர்களுக்கு எழுதியுள்ளேன்..
முதலில் நாம் திட்டமிட வேண்டும்.. வளங்களை உருவாக்க வேண்டும்.. இலக்கைக் குறி வைக்க வேண்டும்..
நாம் செய்தால் எதிரிகூட வேறு வழியில்லாமல் வாழ்த்த வேண்டும்.. இல்லை மௌனமாக இருக்க வேண்டும்..
இந்திரவிழா செய்த நெடியகாட்டு இளைஞர்களால் முடியாதது எது இருக்கப்போகிறது..?
60 களில் நெடியகாட்டில் ஏறிய மகாபாரதம் பட்டத்தின் பெருமையை முந்த இலங்கையில் ஒரு சாதனை உண்டா..?
குத்துவிளக்கு திரைப்படத்திற்கு ஒளி பாய்ச்சியது கணபதி லைற்தான்..
ஈழத்தில் திரைப்பட தயாரிப்பு வெற்றியை தந்த முதன்மையை வல்வை மக்கள் எட்டித் தொட்டு அதிலும் முதல்வர்களாக திகழ வேண்டும் என்பதே என் ஆசை..
மேலும் வல்வை முழுவதையும் ஒன்றிணைத்து பலம் கொடுக்க வேண்டும்...!
எனது காலத்தை வென்றவன் நாடகத்தில் ஊறணியில் இருந்து ஊரிக்காடுவரை நடிகர்கள் நடித்தார்கள்...
தெய்வம்தந்த வீடு படத்தில் நடித்த அண்ணன் முத்துச்சாமியும் உங்களுடன்தான் இருக்கிறார்..
மேலும் சிந்தியுங்கள்... உங்கள் வெற்றி என் வெற்றி..
வி . டினேஸ்கரன் { இயக்குனர் துரோணர் தி (srilanka)
Posted Date: February 16, 2016 at 08:01
மனம் நிறைந்த நன்றிகளுடன் உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களயும் வரவேற்கின்றோம் ... வல்வை மண்ணில் இருந்து எங்களுடைய கடும் முயற்சிக்கு பின்னர் துரோணர் திரைப்படத்தை வல்வை நெடியகாடு இனளஞர் கலா மன்றத்தின் தயாரிப்பு ,நடிப்பு .முயற்சி என்ற தளராத நம்பிக்கையோடும். கதை, திரைக்கதை ,வசனம் ,இயக்கம்,, ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு, இசை ,நடிப்பு , படத்தொகுப்பு ,ஒழுங்கமைப்பு, காட்சிப்படுத்தப்படும் இடம் ,,மக்களின் ஒத்துழைப்பு, போன்ற நடை முறைகளோடுதான் எங்களுடைய துரோணரும் வெளிவந்துள்ளான் . அந்த வகையில் துரோணர் திரைப்படத்தை சிறந்த முறையில் திறனாய்வு செய்து எங்களுடைய கலை ஆர்வத்தை ஊக்கிவித்ததோடு எங்களுடைய திரைப்பட முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் அளித்தமைக்கும் திறனாய்வு செய்து சிறந்த விமர்சனம் வழங்கியமைக்கும் துரோணர் திரைப்பட குழு சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் எதிர் பார்க்கின்றோம்
துரோணர் திரைப்பட குழு
k.S.Thurai (Denmark)
Posted Date: February 15, 2016 at 00:28
இப்படியொரு திரை முயற்சியை எடுத்துள்ளார்கள்.. அதை வாழ்த்தி உற்சாகப்படுத்தும் கடமையை ஏன் செய்யவில்லை வல்வை மக்களே..?
அதுபோல நான் எழுதியுள்ளேன் திரைப்படக்குழு பதில் கருத்து எதுவும் கூறவில்லை..? அவர்களுடைய அடுத்த படம் வரும்போது எழுத எனது பேனா அதற்காக தூண்டப்படுமா என்பதை அவர்களும் சிந்திக்க வேண்டும்..!
முயற்சிகளை வளர்ப்பது நமது கடமை..!
இளைஞர்கள் நல்வழியில் சென்றுள்ளார்கள்.. மௌமாக இருந்துவிட்டு ஊர் கெட்டுவிட்டது என்று சொல்ல எமக்கு உரிமை கிடையாதல்லவா..?
தாழ்மையுடனும்.. தன்னடக்கத்துடனும் இதை தெரிவிக்கிறேன்..
நீர் ஊற்றாமல் செடி வளராது.. இது மக்களுக்கு..
ஒரு கையை வீசி ஓசை எழாது இது கலைஞர்களுக்கு..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.