(ஓய்வுபெற்ற ஆசிரியை - St Saviour's college - திருகோணமலை)
மலர்வு 21.11.1969 உதிர்வு 06.06.2026
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அனுலா உதயசூரியன் ( ஓய்வுபெற்ற ஆசிரியை ) அவர்கள் 06/06/2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பாலசுந்தரம் உதயசூரியன் (இளைப்பாறிய ஆசிரியர்- ஹாட்லிக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
வைத்தியர் சிவசுந்தரம் சோதிமயம் காலஞ்சென்ற சந்திரவதனா அவர்களின் ஏகபுதல்வியும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் (இளைப்பாறிய அதிபர் ) செல்வமாணிக்கம் அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
தங்கரூபன் (R.D.A கிளிநொச்சி), சிவரூபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனி (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்), சுகன்யா (அவுஸ்திரேலியா), இராசமலர், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், மாலினி மற்றும் பத்மினி, சிவாஜி, ஶ்ரீராம், வத்சலா, வசந்தி, மைதிலி, வெண்ணிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஶ்ரீசெழியன், சந்தோஷ், சாமந்தி , ஶ்ரீமன் , ஹருணி ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை அன்று (07/06/2026) காலை 8.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, 10.30 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.